Asia Cup 2022: ஆசிய கோப்பை வரலாற்றில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஆஃப்கானிஸ்தான் வீரர் யார் தெரியுமா?
ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி ரமனுல்லா குர்பாஸ் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை கடைசி ஓவரில் போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் 6 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் உதவியுடன் 84 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆசிய கோப்பை தொடர் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக ரோகித் சர்மா அடித்திருந்த 83 ரன்கள் என்ற ஸ்கோரை முயறியடித்துள்ளார். 2016ஆம் ஆண்டு டி20 முறையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் ரோகித் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தச் சாதனையை படைத்திருந்தார். அந்தச் சாதனையை தற்போது குர்பாஸ் முறியடித்துள்ளார்.
A 22-ball fifty for the Afghanistan opener 🔥#SLvAFG | #AsiaCup2022 | 📝 Scorecard: https://t.co/HqcFCcsaAx pic.twitter.com/OoMP8pe0E6
— ICC (@ICC) September 3, 2022
டி20 ஆசிய கோப்பையில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள்:
ரமனுல்லா குர்பாஸ் 84 vs இலங்கை (2022)
ரோக்தி சர்மா 83 vs பங்களாதேஷ் (2016)
சப்பீர் ரஹ்மான் 80 vs இலங்கை (2016)
தில்சான் 75* vs பாகிஸ்தான் (2016)
அதேபோல் 50 ஓவர் ஆசிய கோப்பை போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் விராட் கோலி 183 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 144 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் முஸ்ஃபிகூர் ரஹிம் 144 ரன்களுடன் உள்ளார்.
சூப்பர் 4 சுற்று அட்டவணை:
செப்டம்பர் 3: ஆஃப்கானிஸ்தான்-இலங்கை
செப்டம்பர் 4: இந்தியா-பாகிஸ்தான்
செப்டம்பர் 6: இந்தியா-ஆஃப்கானிஸ்தான்
செப்டம்பர் 7: பாகிஸ்தான்-இலங்கை
செப்டம்பர் 8: இந்தியா-இலங்கை
செப்டம்பர் 9: ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான்
செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்
அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும். ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி இம்முறையும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் படிக்க:ஆசியகோப்பையில் மீண்டும் மோதும் இந்தியா-பாக்.. ஜடேஜாவிற்கு பதிலாக இவரா?