மேலும் அறிய

Jonny Bairstow Run Out: அசால்ட்டாக இருந்த பேரிஸ்டோவ்.. அலேக்காக ரன் அவுட் செய்த அலெக்ஸ் கேரி.. வைரலாகும் வீடியோ

Jonny Bairstow Run Out: லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேரிஸ்டோவ் ரன் அவுட் செய்யப்பட்ட முறை சர்ச்சையாகியுள்ளது.

Jonny Bairstow Run Out: லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேரிஸ்டோவ் ரன் அவுட் செய்யப்பட்ட முறை சர்ச்சையாகியுள்ளது. 

டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சேசிஸிங் செய்யும் அணிக்காக ஐந்து சதங்கள் அடித்த யூனிஸ் கானுக்குப் அடுத்து அதிக டெஸ்ட் சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் தனது வெற்றிக்கணக்கை துவங்கிய நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 371 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 50 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வளவு தான் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று விடும் என அனைவரும் கூறத் தொடங்கி விட்டனர். ஆனால் அதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை மீட்க ஆரம்பித்தனர். 

சிறப்பாக ஆடி வந்த பென் டக்கெட் 83 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் வந்த பேரிஸ்டோவ் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார். கேமரூன் க்ரீன் வீசிய ஓவரின் கடைசிப் பந்தினை எதிர்கொண்ட பேரிஸ்டோவ் அதனை தவிர்த்து விட்டு, க்ரீஸில் இருந்து உடனே வெளியேறினார். ஆனால் அதற்குள் பந்தைப் பிடித்த ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டெம்பை நோக்கி வீச, பந்தும் ஸ்டெம்பில் பட்டது. உடனே ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் கைப்பற்றியதாக கொண்டாட ஆரம்பித்தனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒன்றும் புரியாமல் பேரிஸ்டோவ் பார்த்துக்கொண்டு இருந்தார். மூன்றாவது நடுவரின் முடிவில் பேரிஸ்டோவ் அவுட் என அறிவிக்கப்பட, ஏமாற்றத்துடன் வெளியேறினார். 

அதுவரை மிகவும் பொறுமையாக ஆடி வந்த ஸ்டோக்ஸ் அதன் பின்னர் ருத்ரதாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதாவது, தான் எதிர்கொண்ட முதல் 126 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்த ஸ்டோக்ஸ், அடுத்த 21 பந்தில் 46 ரன்கள் குவித்தார். அதில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் அடங்கும்.  

அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் ஹாட்ரிக் சிக்ஸர் மூலம் சதத்தை நிறைவு செய்தார். அதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய ஸ்டோக்ஸ் 150 ரன்களைக் கடந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget