Ashes 2022: சிட்னியில் ஆஸ்திரேலியாவை சட்னியாக்கிய இந்திய, இங்கிலாந்து வீரர்கள்.. புது வருஷம், சர்வ நாசம்!
எளிதில் வெற்றிபெறலாம் என்று எண்ணி இருந்த ஆஸ்திரேலியா அணி அடுத்த இரண்டு விக்கெட்களை எடுத்து இருந்தால் எளியதாக வென்று 4-0 என்ற கணக்கில் இருந்து இருக்கும்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த உஸ்மான் கவாஜா 137 ரன்கள் அடித்தார். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியி முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த அணியின் பெர்ஸ்டோவ் மட்டும் சதம் அடிக்க 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இங்கிலாந்து இழந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் உஸ்மான் கவாஜா 101 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 265 ரன்கள் எடுத்தது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நான்காம் நாளான நேற்று இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் க்ராளி 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய பெர்ஸ்டோவ் 41 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடைசியாக ஜேக் லீச் மற்றும் பிராட் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்தது. இருவரும் நல்ல தடுப்பு ஆட்டத்தை முன்வைத்து விக்கெட்டை காப்பாற்றி வந்தனர். ஜேக் லீச் 26 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரப்பரப்பு அதிகமானது. கடைசி 3 ஓவர்களை ஆண்டர்சென்-பிராட் ஜோடி தாக்குப்பிடித்தால் போட்டி டிராகிவிடும் என்ற நிலை வந்தது.
A job well done from Stuart Broad and James Anderson ✅ #Ashes | #WTC23 pic.twitter.com/cERNvmGBbt
— ICC (@ICC) January 9, 2022
அதற்கு ஏற்ப ஆண்டர்சென்-பிராட் ஜோடி சிறப்பாக தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி மூன்று ஓவர்களை தாக்குப்பிடித்தது. இதன்மூலம் நான்காவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. எளிதில் வெற்றிபெறலாம் என்று எண்ணி இருந்த ஆஸ்திரேலியா அணி அடுத்த இரண்டு விக்கெட்களை எடுத்து இருந்தால் எளியதாக வென்று 4-0 என்ற கணக்கில் இருந்து இருக்கும். ஆனால் இந்த இரண்டு விக்கெட்களையும் எடுக்க ஆஸ்திரேலியா அணி தவறியது.
For two straight years now, Sydney has seen two dramatic drawn finishes #Ashes | #AUSvIND pic.twitter.com/9GukgC21pO
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 9, 2022
இதேபோல், கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போட்டியில் இந்தியா அணிக்கு, 407 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்பொழுது களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா 52 ரன்கள், புஜாரா 77 ரன்கள், பண்ட் 97 ரன்கள் எடுத்து அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். அடுத்த ஐந்து விக்கெட்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி உறுதியாகிவிடும். அப்பொழுது களமிறங்கிய அஷ்வின் 128 பந்துகளில் 39 ரன்களுடனும், விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களுடனும் அவுட் ஆகாமல் நின்று போட்டியை டிரா செய்தனர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய (2-1, 2டிரா) என்ற கணக்கில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியா மண்ணில் முதன் முதலாக தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்