Watch Video Ashes 2021-22: பென்ஸ்டோக்ஸ், பார்ஸ்டோவை கேலி செய்த ரசிகர்...! வலுக்கும் கண்டனம் - வைரல் வீடியோ உள்ளே..!
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்சையும், ஜானி பார்ஸ்டோவையும் ரசிகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் கேலி செய்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது. நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்தது. அப்போது, களத்தில் இருந்த ஜானி பார்ஸ்டோவும், பென் ஸ்டோக்சும் ஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். பெவிலியன் திரும்பிய இருவரையும் பார்த்து கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கேலி செய்கிறார்.
The Sydney Test has been marred by crowd abuse for the second year in a row, with England stars Ben Stokes and Jonny Bairstow reacting angrily after being sledged on Friday. Read the full story: https://t.co/OkOsCV7vuW pic.twitter.com/4FdamS2BCA
— The Sydney Morning Herald (@smh) January 7, 2022
அவர் பென்ஸ்டோக்சையும், ஜானி பார்ஸ்டோவையும் அழைத்து. “ ஸ்டோக்ஸ், நீ குண்டாகிவிட்டாய். பார்ஸ்டோ கொஞ்சம் எடையை குறை.” என்று கூறுகிறார். இதனால், பென் ஸ்டோக்ஸ் சற்றுநேரம் கோபத்துடன் அந்த ரசிகரையே பார்க்கிறார். ஆனாலும், அந்த ரசிகர் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அது சரி. திரும்பி பாத்து போங்க என்று கூறி நீங்கள் பலவீனமாகி விட்டீர்கள் என்று சிறுநீருடன் ஒப்பிட்டு கூறுகிறார். இருப்பினும், பென்ஸ்டோக்சும், ஜானி பார்ஸ்டோவும் ஏதும் பேசாமல் பெவிலியன் சென்றுவிட்டனர்.
இந்த வீடியோவை ஆஸ்திரேலியா ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த போட்டியில், ஜானி பார்ஸ்டோ 158 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 113 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 91 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 66 ரன்களும் குவித்தனர். தற்போது இங்கிலாந்து அணி 388 ரன்கள் இலக்குடன் ஆடி வருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா மண்ணில் கிரிக்கெட் விளையாடச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருவதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்