Watch Video: காதை கிழிக்கும் சத்தம்...! வானத்தில் விமான சாகசம்...! உற்சாகத்தில் உலகக்கோப்பை கிரவுண்ட்
இந்தியா- ஆஸ்திரேலிய இறுதிபோட்டியின் தொடக்கமாக விமானப்படை வானத்தில் விமான சாகசங்களை நிகழ்த்தியது. ஜெட் விமானங்கள் அங்கிருந்த ரசிகர்களின் காதை கிழிக்கும் அளவிற்கு சத்தத்துடன் பறந்து சாகசங்களை நிகழ்ந்தது
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 19) ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்தி உள்ளது.
இறுதிப் போட்டி:
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத்தில் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில், முதல் அரையிறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
அதேபோல், நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி. இச்சூழலில் தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை பழிதீர்க்கும் நோக்கில் இந்திய அணி களம் கண்டு வருகிறது, இதனால், உலகக் கோப்பையை இந்திய அணி எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
விமானப்படை சாகசம்:
உலகக் கோப்பை இறுதிப் போட்டி உலககின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதால், அதை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் கூடியுள்ளனர். இதனால்அவர்களை மகிழ்விக்கும் நோக்கில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகச்சி இன்று (நவம்பர் 19) நடைபெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்பாக விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும். ’சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு’ தான் இந்திய விமானப்படையின் சார்பில் சாகசத்தை நிகழ்த்து உள்ளது.
அதன்படி,இறுதிபோட்டியின் தொடக்கமாக விமானப்படை வானத்தில் விமான சாகசங்களை நிகழ்த்தியது. ஜெட் விமானங்கள் அங்கிருந்த ரசிகர்களின் காதை கிழிக்கும் அளவிற்கு சத்தத்துடன் பறந்து சாகசங்களை நிகழ்ந்தது.
#WATCH | ICC World Cup Final: Indian Air Force's Surya Kiran Aerobatic Team performs air show over Narendra Modi Stadium in Ahmedabad, Gujarat#ICCWorldCup2023 #INDvsAUSfinal pic.twitter.com/An7wHKWGb7
— ANI (@ANI) November 19, 2023