Rashid Khan: 100 பந்துகளில் ஆட்டம் காண வைத்த ரஷித் கான்.. பவுண்டரி அடிக்க திணறிய பாகிஸ்தான்..!
ரஷித் கான் 100 பந்துகளை வீசி பவுண்டரிகளை விட்டுகொடுக்கவில்லை. சர்வதேச டி20 (106 பந்துகள்) பந்துகளில் எந்த ஒரு பவுண்டரியும் தராமல் சாதனை படைத்தார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் முதல் முறையாக தொடரையும் வென்றது.
மூத்த வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் ஷதாப் கான் தலைமையில் பாகிஸ்தான் இந்த தொடரில் களம் கண்டது. அதேபோல், ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் தலைமை ஏற்றார்.
இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ரஷித் கான் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அதேபோல், பந்துவீச்சில் மிகப்பெரிய சாதனை ஒன்றையும் படைத்தார். அதில், அவர் T20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடாமல் தொடர்ச்சியாக 100 பந்துகள் வீசி புதிய சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.
Rashid Khan is truly a magician. pic.twitter.com/ruMAkdOnZZ
— Mazher Arshad (@MazherArshad) March 27, 2023
புதிய சாதனை:
கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் ரஷித் கான் கடைசியாக இரண்டு பந்துகளை வீசினார். அதில் எந்த ஒரு பவுண்டரியும் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தலா 4 ஓவர்களை வீசினார். அதிலும் எந்த பவுண்டரியும் வரவில்லை. இதன்மூலம் 50 பந்துகள் பதிவானது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தலா 4 ஓவர்கள் வீசிய ரஷித், பவுண்டரி எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் பவுண்டரி வராத முதல் 8 பந்துகளை வீசினார்.இதன் மூலம் ரஷித் கான் 100 பந்துகளை வீசி பவுண்டரிகளை விட்டுகொடுக்கவில்லை. சர்வதேச டி20 (106 பந்துகள்) பந்துகளில் எந்த ஒரு பவுண்டரியும் தராமல் சாதனை படைத்தார்.
This sixer by Saim Ayub off Rashid Khan is the first boundary hit on Rashid's bowling after 106 deliveries.
— Faizan Lakhani (@faizanlakhani) March 27, 2023
தேதி எண்ணிக்கையில் பந்துவீச்சு விவரம்:
- 16 பிப்ரவரி : UAEக்கு எதிரான முதல் டி20 போட்டி - கடைசி 2 பந்துகளை பவுண்டரி இல்லாமல் வீசினார்.
- 18 பிப்ரவரி: UAEக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி - 24 பந்துகளையும் பவுண்டரி இல்லாமல் வீசினார்.
- 19 பிப்ரவரி: UAEக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி - 4 பந்துகளையும் பவுண்டரி இல்லாமல் வீசினார்.
- 24 மார்ச்: பாகி. எதிரான முதல் டி20 போட்டி -24 பந்துகளை ஒரு பவுண்டரி இல்லாமல் வீசினார்.
- 26 மார்ச்: பாகி. எதிரான இரண்டாவது டி20 போட்டி -24 பந்துகளை ஒரு பவுண்டரி இல்லாமல் வீசினார்.
- 27 மார்ச்: பாகி. எதிரான மூன்றாவது டி20 போட்டி - தான் வீசிய முதல் 8 பந்துகளை பவுண்டரி இல்லாமல் வீசினார்.
இரண்டு தொடர்களையும் கேப்டனாக வென்ற ரஷித் கான்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டி20 தொடர்களிலும் ரஷித் கான் ஆப்கானிஸ்தானுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தொடரிலும் 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக வெற்றி பெற்றது.