மேலும் அறிய

48 Runs In Over: ஏய்.. எப்புட்றா..? ஒரே ஓவரில் 7 சிக்சர்கள்...! காபூல் பிரிமீயர் லீக்கில் நடந்த அதிசயம்..!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பேட்ஸ்மேன் காபூல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரில் 48 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பேட்ஸ்மேன் காபூல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரில் 48 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். 

காபூல் பிரீமியர் லீக் தொடர்:

ஆப்கானிஸ்தனில் காபூல் பிரீமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் டீ-20 தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான தொடர், கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 அணிகள் பங்கேற்றுள்ளன. தற்போது வரையில் 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் கடைசியாக நடைபெற்ற லீக் போட்டியில் தான், கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடைசி லீக் போட்டி:

தொடரின் கடைசி லீக் போட்டியில் ஷாஹின் ஹண்டர்ஸ், அபாசின் டிஃபெண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அபாசின் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷாஹின் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை  குவித்து இருந்தது. அப்போது, செதிகுல்லா அடல் 77 ரன்களையும், செய்த் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

ஒரே ஓவரில் 48 ரன்கள்:

இந்த நிலையில் தான் போட்டியின் 19வது ஓவரை, அபாசின் அணியின் சாஜி வீசினார். முதல் பந்தை நோ பாலாக வீச செதிகுல்லா அதனை சிக்சராக விளாசினர். இதையடுத்து வீசிய பந்து வைடுடன் பைஸ் முறையில் ஃபோர் ஆகவும் மாறியது.  தொடர்ந்து, ஃபிரீ ஹிட் முறையில் வீசப்பட்ட முதல் பந்து உட்பட 6 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி செதிகுல்லா ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் அந்த ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்சர்கள், 5 வைட்கள் மற்றும் ஒரு நோ பால் உட்பட 48 ரன்களை ஷாஹின் ஹண்டர்ஸ் அணி சேர்த்தது. இதன் மூலம் உள்ளூர் போட்டிகள் தொடங்கி சர்வதேச போட்டிகள் வரையில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை செதிகுல்லாவும், ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை சாஜியும் படைத்தார்.

ஷாஹின் அணி அபார வெற்றி:

அதிரடியான ஆட்டத்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்ல, 56 பந்துகளில் 10 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 118 ரன்களை விளாசினார். இதனல் ஷாஹின் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய அபாசின் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால், 18.3 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை மட்டுமே சேர்ந்த்து, அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம், ஷாஹின் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் அபாசின் அணி தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் தான், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 தொடரின் மூலம் செதிகுல்லா சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget