IND vs WI :2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள்… வெளியான இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை!
இந்திய அணி ஜூலை 5 - 6 தேதிகளில் கரீபியன் தீவுகளுக்குப் புறப்படும். ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், WTC முடித்து மூன்று வார விடுமுறையில் இந்திய அணி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் எங்கெங்கு, எப்போது நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் (CWI) பகிர்ந்த தற்காலிக அட்டவணை அடிப்படையில், பார்படாஸ், டிரினிடாட்டில் மூன்று ஒரு நாள் போட்டிகள் (ODIகள்) மற்றும் டிரினிடாட், கயானா, ஃபுளோரிடாவில் ஐந்து டி20 போட்டிகள் (T20Is) என, 8 லிமிட்டட் ஓவர்கள் போட்டிகளை நடத்தும் என்பது தெரிகிறது. இதற்கு முன்னதாக டொமினிகா, டிரினிடாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கின்றன். இதில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளது குறிபபிடத்தக்கது. இந்தத் தொடர் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய அணி ஜூலை 5-6 தேதிகளில் கரீபியன் தீவுகளுக்குப் புறப்படும். ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடித்து மூன்று வார விடுமுறையில் இந்திய அணி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் முறையான அட்டவணை வரவில்லை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அட்டவணையை முடித்தவுடன் போட்டிகளுக்கான முறையான தேதிகள் அறிவிக்கப்படும். அமெரிக்காவில் நடகும் இரண்டு கூடுதல் T20Iகளுக்கான ஒப்பந்தம் போர்டுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவில்லை என்றாலும், இது ஓரிரு நாளில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக BCCI மற்றும் CWI இன் பிரதிநிதிகள் கூடுவார்கள். இந்தியா-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் இடங்களின் உறுதிப்பாட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், வரவிருக்கும் தொடருக்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது இரு நாடுகளுக்கு இடையேயான, உற்சாகமான கிரிக்கெட் போட்டிகளை வெளிப்படுத்த உள்ளது.
ஒளிபரப்பு உரிமை
இதற்கான ஒளிபரப்பு உரிமையைப் பொறுத்தவரை, Viacom18 இந்த தொடருக்கான டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது, இதன்மூலம் ஜியோ சினிமாவில் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2023ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பிய ஜியோ சினிமா இதனையும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் ஸ்போர்ட்ஸ், ஃபேன்கோட் ஆகியவை, வெஸ்ட் இண்டீஸ்-இன் இருதரப்பு போட்டிகளுக்கான உரிமைகளை வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்கள், Viacom18 க்கு டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு துணை உரிமம் வழங்கியுள்ளனர். கூடுதலாக, ட்ரீம் ஸ்போர்ட்ஸ் தற்போது தேசிய ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியுடன் தொலைக்காட்சி உரிமைக்காக பேரம் பேசி வருகிறது. டிடி ஸ்போர்ட்ஸ் இதனை ஒளிபரப்பும் என்று தெரிகிறது.
உறுதிப்படுத்தபடாத அட்டவணை:
ஜூலை 12-16: டொமினிகாவில் முதல் டெஸ்ட்
ஜூலை 20-24: டிரினிடாட்டில் 2வது டெஸ்ட்
ஜூலை 27: பார்படாஸில் முதல் ஒருநாள் போட்டி
ஜூலை 29: பார்படாஸில் 2வது ஒருநாள் போட்டி
ஆகஸ்ட் 1: டிரினிடாட்டில் 3வது ஒருநாள் போட்டி
ஆகஸ்ட் 4: டிரினிடாட்டில் முதல் டி20 ஐ
ஆகஸ்ட் 6: கயானாவில் 2வது டி20
ஆகஸ்ட் 8: கயானாவில் 3வது டி20
ஆகஸ்ட் 12: புளோரிடாவில் 4வது டி20ஐ
ஆகஸ்ட் 13: புளோரிடாவில் 5வது டி20ஐ