CWG 2022 Weightlifting: காமன்வெல்த் பளுதூக்குதலில் மூன்று ஃபவுல் செய்து பதக்கத்தை தவறவிட்ட பூனம் யாதவ்
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பூனம் யாதவ் 76 கிலோ எடைப் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று பளுதூக்குதல் மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பூனம் யாதவ் பங்கேற்றார். இவர் முதலில் ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 95 கிலோ எடையை தூக்க முற்பட்டார். எனினும் அந்த முயற்சியில் இவர் 95 கிலோ எடையை தூக்கவில்லை.
அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 95 கிலோ எடையை தூக்கினார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் இவர் 98 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் ஸ்நாட்ச் பிரிவின் முடிவில் கனடா வீராங்கனை மாயா லாய்லருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தார். மாயா லாய்லர் ஸ்நாட்ச் பிரிவில் 100 கிலோ எடையை தூக்கியிருந்தார்.
Commonwealth games : Weightlifting
— Sports India (@SportsIndia3) August 2, 2022
Poonam Yadav failed to Register a weight in Clean and Jerk and hence finish with no Lift in wormen 76kg
She was in Second position after Snatch with 98kg lift pic.twitter.com/5i9W4Clz9Q
இதைத் தொடர்ந்து கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தன்னுடைய முதல் வாய்ப்பில் 116 கிலோ எடையை தூக்காமல் ஃபவுல் செய்தார். இரண்டாவது முயற்சியிலும் 116 கிலோ எடையை தூக்காமல் ஃபவுல் செய்தார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 116 கிலோ எடையை தூக்காமல் ஃபவுல் செய்தார். இதனால் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் ஒரு வாய்ப்ப்பில் கூட சரியாக தூக்கவில்லை இதன்காரணமாக அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியா அசத்தி வரும் சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூனம் யாதவ் தற்போது பதக்கம் வெல்லாமல் சொதப்பியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்று மொத்தமாக 9 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் பளுதூக்குதலில் மூன்று தங்கம் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்