CWG 2022 Badminton: காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வெற்றியுடன் தொடங்கி அசத்திய பி.வி.சிந்து
காமன்வெல்த் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
காமென்வ்ல்த் போட்டிகளில் முதல் குழு பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்திய அணி இறுதிப் போட்டி முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்நிலையில் இன்று முதல் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் நடைபெற உள்ளன.
முதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து மாலதீவுகள் வீராங்கனை ஃபாத்திமாத் அப்துல் ரசாகை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் பி.வி.சிந்து தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதில் முதல் கேமை 21-4 என்ற கணக்கில் வென்றார்.
#Badminton Update🚨@Pvsindhu1 🇮🇳 defeats Fathimath Nabaaha 🇲🇻 in Women’s Singles Round of 32 (21-4, 21-11)
— SAI Media (@Media_SAI) August 4, 2022
She now advances to the Round of 16 👍
All the best Champ 🏸#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/lmSUGJlAir
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் மாலதீவுகள் வீராங்கனை தொடக்கத்தில் புள்ளிகளை எடுத்தார். எனினும் சிந்து தன்னுடைய அனுபவ ஆட்டத்தை பயன்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார். இறுதியில் இரண்டாவது கேமை சிந்து 21-10 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தப் போட்டியையும் 21-4,21-10 என்ற கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் உகாண்டா நாட்டின் டேனியல் வானாங்கலியாவை எதிர்த்து விளையாட உள்ளார். இதைத் தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி போனப்பா மற்றும் சுமித் ரெட்டி இங்கிலாந்தின் ஜெசிகா-ஹமிங் இணையை எதிர்த்து விளையாட உள்ளது. இன்று நள்ளிரவு நடைபெறும் போட்டியில் லக்ஷ்யா சென் தன்னுடைய முதல் சுற்றில் களமிறங்க உள்ளார். இவர்கள் அனைவரும் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிவிடுவார்கள். ஆகவே காமன்வெல்த் பேட்மிண்டன் இன்று இந்தியாவிற்கு சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்