CWG 2022 Table Tennis:காமன்வெல்த் ஆடவர் குழு டேபிள் டென்னிஸ் மூன்று வெற்றியுடன் காலிறுதிக்கு இந்தியா தகுதி !
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் இந்திய அணி நார்தன் அயர்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குழு டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி நேற்று முதல் இரண்டு குரூப் போட்டிகளில் வெற்றி பெற்றது. முதலில் இந்திய ஆடவர் அணி நேற்று சிங்கப்பூர் மற்றும் பார்படாஸ் அணிகளை வீழ்த்தியிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய அணி கடைசி குரூப் போட்டியில் நார்தன் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதலில் ஆடவர் இரட்டையர் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் சர்தம் கமல் மற்றும் ஹர்மித் தேசாய் ஜோடி ஜேம்ஸ்-ஓவன் இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-3,9-11,11-6,11-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் இந்திய அணிக்கு 1-0 என முன்னிலை அளித்தது.
🇮🇳🏓 Table tennis Men's Team - Group 3 Match
— India Sports Updates (@indiasportsup) July 30, 2022
India defeats Northern Ireland 3-0 in 3rd group match
India is yet to lose a match in TT#CWG2022 #Birmingham2022 #CWG #CommonwealthGames @birminghamcg22 #TeamIndia #B2022 #EkIndiaTeamIndia @CGI_Bghm #TableTennis #Sharathkamal pic.twitter.com/YnLi3BhJMh
இதைத் தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் போட்டியில் சனில் செட்டி பவுல் மெக்ரியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சனில் செட்டி அதிரடியாக விளையாடினார். இவர் 11-5,15-13, 11-6 என்ற கணக்கில் போட்டியை வென்றார். இதன்காரணமாக இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
அடுத்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஹர்மித் தேசாய் ஓவனை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை ஓவன் 11-5 என வென்றார். அடுத்து கேமை சுதாரித்து கொண்டு ஆடிய ஹர்மித் தேசாய் 11-9 என வென்றார். பின்னர் 3வது கேமில் சிறப்பாக விளையாடிய ஓவன் 14-12 என்ற கணக்கில் வென்றார். அதற்கு அடுத்து நடைபெற்ற 4வது கேமை 11-3 என்ற கணக்கில் ஹர்மித் தேசாய் வென்றதால் இருவரும் 2-2 என இருந்தனர். இதையடுத்து நடைபெற்ற 5வது கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மித் தேசாய் 11-6 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் இந்திய அணி நார்தன் அயர்லாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்