CWG 2022 Table tennis: காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கம் வென்ற சரத் கமல்
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் குழு பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. அதன்பின்னர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் மற்றும் சத்யன் இணை வெள்ளி வென்று அசத்தியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீரர் சரத் கமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சரத் கமல் இங்கிலாந்து வீரர் பிட்ச்ஃபோர்டை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை இங்கிலாந்து வீரர் 13-11 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் சரத் கமல் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக இரண்டாவது கேமை 11-7 என்ற கணக்கில் வென்றார். அடுத்து மூன்றாவது கேமை 11-2 என்ற கணக்கில் எளிதாக வென்று அசத்தினார்.
Sharath Kamal you beauty 😍
— India_AllSports (@India_AllSports) August 8, 2022
40 yrs young Sharath wins GOLD medal after beating WR 20 Liam Pitchford 4-1 in Final.
👉 Its 2nd CWG Singles Gold medal for Sharath.
👉 Its Gold medal No. 22 for India #CWG22india #CWGwithIAS pic.twitter.com/qcs3jhoKF1
அதன்பின்னர் நான்காவது கேமை 11-6 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக 3 கேம்களை வென்று அசத்தினார். 5வது கேமிலும் சரத் கமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கேமை 11-8 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதன்மூலம் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார்.
கடைசியாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2006ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று இருந்தார். தற்போது அதன்பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இவர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் நடப்பு காமன்வெல்த் தொடரில் 40 வயதான சரத் கமல் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று மொத்தமாக 4 பதக்கங்களுடன் திரும்பியுள்ளார்.
முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்க போட்டியில் இந்திய வீரர் சத்யன் பங்கேற்றார். இவர் இங்கிலாந்து வீரர் ட்ரின்ஹாலை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சத்யன் 11-9,11-3,11-5,8-11,9-11,10-12,11-9 என்ற கணக்கில் போராடி வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்