CWG 2022 Weightlifting: காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு வெண்கலம் வென்ற லவ்பிரீத் சிங்..!
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் லவ்பிரீத் சிங் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று பளுதூக்குதல் ஆடவருக்கான 109 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் லவ்பிரீத் சிங் பங்கேற்றார். இவர் முதலில் ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 157 கிலோ எடையை தூக்கி அசத்தினார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 161 கிலோ எடையை தூக்கினார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் இவர்163 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் ஸ்நாட்ச் பிரிவின் முடிவில் அதிகபட்சமாக 163 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் லவ்பிரீத் சிங் தன்னுடைய முதல் வாய்ப்பில் 185 கிலோ எடையை தூக்கினார். அடுத்து அவருடைய இரண்டாவது முயற்சியில் இவர் 189 கிலோ எடையை தூக்கி அசத்தினார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 192 கிலோ எடையை தூக்கி அசத்தினார். கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 192 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் ஸ்நாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் மொத்தமாக இவர் 355 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
LOVEPREET WINS BR🥉NZE !!
— SAI Media (@Media_SAI) August 3, 2022
The weightlifting contingent is giving us major MEDAL moments at #CommonwealthGames2022🤩
Lovepreet Singh bags Bronze🥉 in the Men's 109 Kg category with a Total lift of 355 Kg
Snatch- 163Kg NR
Clean & Jerk- 192Kg NR
Total - 355kg (NR) pic.twitter.com/HpIlYSQxBZ
நேற்று ஆடவர் 96 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். காமன்வெல்த் பளுத்தூக்குதலில் இந்தியா தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன்காரணமாக அதிகமான பதக்கங்களை குவித்து வருகிறது. நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளது. அத்துடன் இந்திய அணி பதக்கப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்