CWG 2022 Hockey: காமன்வெல்த் மகளிர் ஹாக்கி கனடாவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி..!
காமன்வெல்த் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதலில் கானா அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று இந்திய மகளிர் அணி கனடா அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் சலிமா கோல் அடித்தார். முதல் கால்பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் 22வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் நவ்னீத் கவுர் கோல் அடித்தார். இதனால் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்கு அடுத்த நிமிடமே கனடா அணி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தது. இதன் காரணமாக கனடா அணி இந்தியாவின் முன்னிலை 1-2 என குறைத்தது.
Full Time! #WomenInBlue triumph over Canada in today's match at the Birmingham 2022 Commonwealth Games, proving that victory and India go well together.
— Hockey India (@TheHockeyIndia) August 3, 2022
CAN 2:3 IND#IndiaKaGame #HockeyIndia #B2022 #Birmingham2022 @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI pic.twitter.com/dItuOXXSxy
மூன்றாவது கால் பாதியில் தொடக்கத்தில் 39 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கனடா அணி மேலும் ஒரு கோலை அடித்தது. இதனால் இரு அணிகளும் தலா 2-2 என சமமாக இருந்தன. இந்தச் சூழலில் நான்காவது மற்றும் கடைசி கால் பாதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் ஆட்டத்தின் 51வது நிமிடம் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய லால்ரேஷ்மி கோல் அடித்து அசத்தினார். இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதி வரை கனடா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இந்திய அணி கனடாவை வீழ்த்தி அசத்தியது. அத்துடன் மகளிர் ஹாக்கி குரூப் பிரிவில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்