CWG 2022 Shotput: காமன்வெல்த் குண்டு எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்திய மன்பிரீத் கவுர்..
காமன்வெல்த் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று முதல் தடகள போட்டிகள் தொடங்கியுள்ளன. மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்றார். தகுதிச் சுற்று போட்டியில் 18 மீட்டர் தூரத்தை தாண்டி குண்டு வீசினால் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறலாம். அப்படி இல்லையென்றால் தகுதிச் சுற்றில் முதல் 12 இடங்களுக்குள் வரும் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.
இந்நிலையில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் தகுதிச் சுற்றில் முதல் வாய்ப்பில் 15.83 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் 16.68 மீட்டர் தூரம் வீசினார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் அதிகபட்சமாக 16.78 மீட்டர் தூரம் வீசினார். அத்துடன் மொத்தமாக தகுதிச் சுற்றில் 7வது இடத்தை பிடித்தார்.
Commonwealth games :Athletics
— Sports India (@SportsIndia3) August 2, 2022
Manpreet Kaur,Sreeshankar Murli & Muhammed Anees qualify for Final
In Long jump Sreeshankar jump 8.05 in his 1st attampt to finish only Automatic qualifier while Anees finish 8th(7.68)
Manpreet finish 7th with best effort of16.78 in women shotput pic.twitter.com/PTCzzpeErd
தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வந்த காரணத்தால் மன்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இறுதிப் போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது.
முன்னதாக ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டிகள் நடைபெற்றன. நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் முகமது அனாஸ் யஹியா ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் 8 மீட்டரை தாண்டி குதித்தால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அப்படி இல்லையென்றால் தகுதிச் சுற்றில் முதல் 12 இடங்களை பிடிக்கும் நபர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். தகுதிச் சுற்றில் முரளி ஸ்ரீசங்கர் தன்னுடைய முதல் வாய்ப்பில் 8.05 மீட்டர் தூரம் தாண்டி அசத்தினார். அத்துடன் முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்