CWG 2022 Boxing: காமன்வெல்த் குத்துச்சண்டையில் தங்கமா? வெள்ளியா? : இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்திய அமித் பங்கால் ..
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான 48கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். ஆடவருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஸரீன், 60 கிலோ எடைப்பிரிவில் ஜெயஸ்மீன் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.
இந்நிலையில் ஆடவருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் ஸாம்பியா நாட்டைச் சேர்ந்த பேட்ரிகை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இரு வீரர்களும் சிறப்பாக விளையாடினர். முதல் சுற்றில் இரண்டு வீரர்களுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்பட்டது.
இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கால் சற்று அதிகமான புள்ளிகள் எடுத்தார். மூன்றாவது சுற்றில் எந்த வீரருக்கு அதிகமான புள்ளிகள் கிடைக்கிறதோ அந்த வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடுவார். இந்த மூன்றாவது சுற்றில் அமித் பங்கால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
2️⃣/2️⃣ for 🇮🇳
— Boxing Federation (@BFI_official) August 6, 2022
2018 Asiad gold medallist @Boxerpanghal puts up a heroic performance to eke out his 🇿🇲 opponent in an unanimous decision and seal his berth in the Finals of #CommonwealthGames2022. 🥊👏@AjaySingh_SG | @debojo_m #Commonwealthgames#B2022#PunchMeinHainDum 2.0 pic.twitter.com/YuMP7FsXwW
முன்னதாக இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி போட்டியில் கனடாவின் பிரியங்கா தில்லானை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் சுற்றில் இவர் அதிகமான புள்ளிகளை எடுத்தார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தச் சுற்றிலும் புள்ளிகளை வென்றார். இதைத் தொடர்ந்து 3வது சுற்றில் கனடா வீராங்கனையை நாக் அவுட் செய்து வெற்றி பெற்றார்.அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்