Commonwealth Games 2022: காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் களமிறங்கும் இந்தியர்கள் யார் யார்?- முழு பட்டியல் இதோ..
Commonwealth Games 2022 India Schedule: காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் களமிறங்கும் இந்தியர்கள் யார் யார்?

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று முதல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 72 நாடுகளை சேர்ந்த சுமார் 5000 வீரர் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று வண்ணமையமான தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மன்ப்ரீத் சிங் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் இந்திய மூவர்ண கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளின் முதல் நாளான நாளை எந்தெந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர் தெரியுமா?
மகளிர் ஹாக்கி: இந்தியா vs கானா- மாலை 5.30 மணிக்கு
மகளிர் கிரிக்கெட்: இந்தியா vs ஆஸ்திரேலியா- மாலை 3.30 மணிக்கு
குத்துச்சண்டை: சிவ் தாபா vs சுலேமான் பலோச் - (ஆடவர் 63.5 கிலோ எடைப்பிரிவு) - மாலை 5 மணிக்கு
பேட்மிண்டன்: இந்திய கலப்பு அணி vs பாகிஸ்தான் மாலை 6.30 மணிக்கு
Commonwealth Games : Day 1
— Sports India (@SportsIndia3) July 28, 2022
India will fight for 8 Gold Medals which include Cycling Sprint/Pursuit team final, Kusshagra Rawat 400m freestyle final
Shiva thapa, Srihari, Sajan ,women cricket & hockey team will be in action
Full schedule with IST timing👇👇
Do share 🇮🇳❤️ pic.twitter.com/PriSebCYfk
டேபிள் டென்னிஸ்: ஆடவர்: இந்தியா vs பார்பேடாஸ் - மாலை 4.30 மணிக்கு
இந்தியா vs ஃபிஜி - இரவு 11.00 மணிக்கு
மகளிர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா - மதியம் 2.00 மணிக்கு
இந்தியா vs சிங்கப்பூர் - இரவு 8.30 மணிக்கு
நீச்சல்: குஷ்காரா ராவத் மகளிர் 400 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் - மாலை 3.15 மணிக்கு
சஜன் பிரகாஷ் 50 மீட்டர் பட்டர்ஃபிளை - மாலை 4.03 மணிக்கு
ஸ்ரீஹரி நட்ராஜ் 100 மீட்டர் பேக்ஸ்டோர்க் - மாலை 4.26 மணிக்கு
இவை தவிர இந்திய ஜிம்னாஸ்டிக் அணி, லான் பால் அணிகளும் நாளை தங்களுடைய போட்டிகளில் களமிறங்க உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

