மேலும் அறிய

Chess World Cup final: யார்தான் சாம்பியன்? இன்று Tie - பிரேக்கரில் மோதும் பிரக்ஞானந்தா - கார்ல்சென்! இதுவும் டை ஆனா என்ன ஆகும்?

செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி கிளாசிக்கல் சுற்றில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சென் மோதிய இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தது.

செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி கிளாசிக்கல் சுற்றில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சென் மோதிய இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இந்தநிலையில், உலக போப்பை செஸ் போட்டியில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று குறுகிய சுற்று போட்டியை கொண்ட டை-பிரேக்கர் நடைபெறுகிறது. 

டை - பிரேக்கர் (Tie - Breaker) என்றால் என்ன..?

போட்டியிடும் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அதில், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி என அதிகரிக்கப்படும்.  இந்த முறையிலும் எந்தவொரு வீரரும் வெற்றியாளராக ஆகவில்லை என்றால், ஒவ்வொரு வீரருக்கும் 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டுடன் வீரர்கள் மேலும் இரண்டு கேம்களை விளையாடுவார்கள். இதிலும்,  ஒவ்வொரு வீரரும் நகர்வு 1ல் தொடங்கி, ஒரு நகர்வுக்கு 10 வினாடிகள் அதிகரிப்பைப் பெறுவார்கள். 

இந்த முறையிலும் வெற்றி பெறவில்லை என்றால் 5 நிமிடங்கள் என ஆட்டங்கள் பிரிக்கப்பட்டு முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து விளையாடுவர். 

இவற்றிலும் இரண்டு வீரர்கள் டை செய்தால், டைபிரேக்கின் பிளிட்ஸ் பகுதி தொடங்கும். பிளிட்ஸ் பகுதியில், வீரர்களுக்கு 3 நிமிடம் வழங்கப்பட்டு நகர்வு 1 முதல் 2-வினாடி அதிகரிப்புடன் விளையாடுவார்கள். வெற்றியாளர் வரும் வரை இந்த வடிவம் மீண்டும் தொடரும்.

பிரக்ஞானந்தா அரையிறுதியில் அமெரிக்காவின் பேபியானா கருவானாவை எதிர்கொண்டு வெற்றிபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே! அந்த போட்டியில் பிரக்ஞானந்தா டை பிரேக்கர் முறையில்தான் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர் பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சன் நேருக்கு நேர்

போட்டிகள் - 19

டிரா - 6

கார்ல்சன் - 8

பிரக்ஞானந்தா - 5

இறுதிப்போட்டியை எங்கே பார்க்கலாம்..?

டை-பிரேக்கர்ஸ் ஆகஸ்ட் 24, வியாழன் அன்று மாலை 4:30 IST மணிக்கு தொடங்கும். இது FIDE செஸ் மற்றும் செஸ்பேஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ சேனல்களில் YouTube இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பிரக்ஞானந்தா பற்றி சில வரிகள்: 

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்த பிரக்ஞானந்தா தனது மூத்த சகோதரி வைஷாலி 6 வயதில் விளையாடத் தொடங்கிய பிறகு செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டினார். அப்போது அவருக்கு வயது இரண்டுதான்.

வைஷாலி அதன்பின்னர், கடந்த 2018 இல் கிராண்ட்மாஸ்டர் பட்டமும், 2021 இல் சர்வதேச மாஸ்டர் பட்டமும் பெற்றார்.

பிரக்ஞானந்தா 6 வயதாக இருக்கும்போதே, ​ 7 வயதுக்குட்பட்ட இந்திய சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது தரவரிசையைப் பெற்றார். தொடர்ந்து அதே ஆண்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கமும் வென்றார். பின்னர் 8 வயதுக்குட்பட்ட மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில், ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த KIIT சர்வதேச செஸ் விழாவில் தனது ஒன்பதாவது வயதில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா புதிய வரலாற்றைப் படைத்தார். தொடர்ந்து, 10 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில், அவர் ஒரு சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனார். மிகவும் இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் வென்றவர் இவர்தான்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Embed widget