Chess: மீண்டும் விளையாட்டு உலகில் சோகம்.. செஸ் விளையாடி கொண்டிருந்த வீரர் திடீர் மரணம்..!
ஹைதரபாத்தில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது மூத்த வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதரபாத்தில் செஸ் விளையாட்டின் போது மூத்த வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஸ் வீரர் மரணம்:
உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில், உலகளவில் நோய்களுக்கும் பஞ்சமில்லாத சூழல் தான் நிலவுகிறது. ஒன்று போய் ஒன்று வந்தது என்பது நாளும் புதுப்புது பாதிப்புகளை உடலை தாக்குவதால் ஆரோக்கியம் பேணுவதில் மிகுந்த கவனம் தேவை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைப்பதில் தொடர் கவனம் செலுத்துவதால் பல்வேறு உளவியல் ரீதியிலான பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
இப்படியான நிலையில் சமீபகாலமாக விளையாட்டு துறையில் ஏராளமான மாரடைப்பு சம்பவங்களும் நிகழ்கின்றன. அதாவது விளையாடி கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய துயர சம்பவங்கள் நடைபெற்று ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே கால்பந்து, கபடி போன்ற போட்டிகளில் வீரர்களின் மரணம் நிகழ்ந்ததை பலராலும் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனிடையே ஹைதரபாத்தில் செஸ் விளையாட்டின் போது மூத்த வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
We have sad news coming in. Experienced chess player and a regular face in the Hyderabad Chess circuit, V.S.T Sai passed away today while playing a game of chess in the SLAN 1st International Below 1600 FIDE Rated tournament.
— ChessBase India (@ChessbaseIndia) August 26, 2023
V.S.T Sai was 72 years old, and an executive… pic.twitter.com/8qNz0cWDsD
மயங்கி விழுந்து உயிரிழப்பு:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைஆர்வமுடன் விளையாடும் செஸ் போட்டியானது நம் அறிவுத்திறனை பலப்படுத்தும். இந்த விளையாட்டின் அடிப்படை தெரிந்தாலே எந்த வயதிலும் மிகவும் பிடித்தமான விளையாட்டாகவே இருக்கும். இதற்கிடையில் ஹைதராபாத் நகரில் செஸ் தொடர் ஒன்று நடைபெற்றது. இதில் செஸ் தரவரிசையில் 1600 புள்ளிகளுக்கு கீழ் பெற்ற வீரர்கள் விளையாடினர். அந்த வகையில் சாய் என்ற 72 வயதான ஒருவர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.
தன் வயதையும் பொருட்படுத்தாமல் சாய் ஒரு இளைஞரைப் போல தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்றது அங்கிருந்த இளம் வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. போட்டிகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அசத்திய அவர், நேற்று 5ஆம் சுற்று ஆட்டத்தில் பங்கேற்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சாய் திடீரென்று மயங்கி சரிந்தார். உடனடியாக போட்டி அமைப்பாளர்கள் சாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவரின் மரணம் எதனால் நிகழ்ந்தது என காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. மாரடைப்பு காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. செஸ் விளையாட்டை உயிராக நேசித்த சாயின் மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.