Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்ட 5 தமிழர்கள் வெற்றி...!
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது சுற்றில் 5 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
![Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்ட 5 தமிழர்கள் வெற்றி...! Chess Olympiad 2022: Pragganandhaa Gukesh and 4 other Tamil Nadu players won their second round match today Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்ட 5 தமிழர்கள் வெற்றி...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/407c30f10411235fcd013a317794affb1659190465_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து இந்திய அணிகளும் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் களமிறங்கினர். முதல் சுற்று போட்டியில் ஓய்வில் இருந்த பிரக்ஞானந்தா இன்று களமிறங்கினார்.
இந்நிலையில் தற்போது பிரக்ஞானந்தா உள்ளிட்ட 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை பிரக்ஞானந்தா இந்தியா பி அணி சார்பில் எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 41வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா கிரில் சுக்கவினை வீழ்த்தி அசத்தினார். அவரைப் போல் இந்திய சி பிரிவில் விளையாடிய கார்த்திக்கேயன் முரளி விளையாடினார். அவர் மெக்சிகோ வீரருக்கு எதிரான போட்டியில் 30வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.
மகளிர் பிரிவில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்த நந்திதா சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதேபோல் இந்திய பி பிரிவில் இடம்பெற்று இருந்த அதிபன் பாஸ்கரன் 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியா பி பிரிவில் விளையாடிய மற்றொரு தமிழ்நாடு வீரரான குகேஷ் எஸ்டோனியா வீரரை வீழ்த்தி அசத்தினார். அவர் தன்னுடைய 39வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
நேற்றைய வெற்றி விவரம்:
இந்திய பெண்கள் அணி A – தஜிகிஸ்தான்
1. கொனெரு ஹம்பி ஆண்டனோவா
கருப்பு நிறம், 41 வது நகர்த்தலில் வெற்றி
2. வைஷாலி – அப்ரோவா
வெள்ளை நிறம், 39 வது நகர்த்தலில் வெற்றி
3. தனியா சச்தேவ் – 59 நகர்த்தல் வெற்றி
4. குல்கர்னி பாக்தி – 50 வது நகர்த்தலில் வெற்றி
இந்திய பெண்கள் அணி B – வேல்ஸ் அணிக்கு எதிராக.
1. வந்திகா அகர்வால் - 56 வது நகர்த்தலில் வெற்றி
2. சவுமியா சாமிநாதன் – கிம்பர்ளி, 37 வது நகர்த்தலில் வெற்றி
3. கோமேஸ் மேரி அண் – 29 வது நகர்த்தலில் வெற்றி
4. திவ்யா தேஷ்முக் – 34 வது நகர்த்தலில் வெற்றி
இந்திய பெண்கள் அணி C – ஹாங் காங்
1. கர்வதே ஈஷா – 49 வது நகர்த்தலில் வெற்றி
2. நந்திதா – 29 வது நகர்த்தலில் வெற்றி
3. சாஹிதி வர்ஷினி – 37 வது நகர்த்தலில் வெற்றி
4. பிரத்யுஷா போடா – 32 வது நகர்த்தலில் வெற்றி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)