44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் கலெக்டர்
ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மஞ்சபைகளை வழங்கி செல்பி பாயின்டில் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெறும். சர்வதேச சதுரங்க போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு மஞ்சபைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக செல்ஃபி பாயின்டில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். பிரமாண்டமாக நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று பிரபசங்கர் கூறினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டிகள், இருசக்கர வாகன பேரணி, ரங்கோலி போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்து மாவட்ட ஆட்சியர் சென்ற பின்னர், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக எடுத்து வரப்பட்ட மஞ்சப்பைகளை கரூர் பேருந்து நிலையத்தில் வழங்கினார். மஞ்சப்பைகளை வாங்குவதற்காக பொதுமக்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு அதிகாரியை அலறவிட்டனர். கொண்டுவரப்பட்ட மஞ்சப்பைகளை கொடுத்து விட்டு மீண்டும் மஞ்சப்பைகள் கேட்டு முண்டியடித்த பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரி ஓட்டம் பிடித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்