Australian Open: ஆஸ்.ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் சானியா மிர்சா- போபண்ணா இணை தோல்வி
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் சானியா மிர்சா- போபண்ணா இணை தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் சானியா மிர்சா- போபண்ணா இணை தோல்வியை தழுவியது.
இறுதி போட்டியில் ஸ்டெஃபானி-மெடோஸ் இணையிடம் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்திய ஜோடி தோல்வி:
ஆஸ்திரேலிய ஓபன் டடென்னிஸ் போட்டியின் கலப்பு பிரிவின் இரட்டையருக்கான இறுதி போட்டி இன்று ( வெள்ளி கிழமை ) நடைபெற்றது. இந்திய ஜோடிகளான சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியும் பிரேசில்-ன் லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியும் மோதின.
The FIRST all-🇧🇷 team to win a Grand Slam mixed doubles title!
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
Rafael Matos • @Luisa__Stefani • @wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2023 pic.twitter.com/Aw4UDtZsOP
இப்போட்டியில், 7-6, 6-2 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியிடம் தோல்வியை தழுவியது.
இதற்கு முன்பு, இது தான் தனது கடைசி கிராண்ட்ஸ்லம் போட்டி என்று சானியா மிர்சா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறியது, ரசிகர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.