மேலும் அறிய

IND Vs NZ, 1st T20: பாண்ட்யா தலைமையில் களமிறங்கும் இளம் டி-20 இந்திய அணி.. பதிலடி தருமா நியூசிலாந்து!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி-20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி-20 தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியதோடு, ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி-20 தொடர் இன்று தொடங்க உள்ளது.

முதல் டி-20 போட்டி:

ஒருநாள் தொடரில் விளையாடிய ரோகித், கோலி மற்றும் சிராஜ் ஆகியோருக்கு, டி-20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. ஒருநாள் தொடரை போன்று டி-20 தொடரையும் கைப்பற்ற இந்திய அணியும், டி-20 தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி நிலவரம்:

சுப்மன் கில், இஷான் கிஷன்,  சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் பாண்ட்யா  ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் இந்திய அணிக்கு பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற டி-20 தொடரிலும், பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி நிலவரம்:

நியூசிலாந்து அணியை பொருத்த வரையில் வில்லியம்சன், சவுதி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய மூத்த வீரர்கள் ஓய்வில் உள்ள நிலையில், பென் லிஸ்டர் அறிமுக வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்வே ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவராக உள்ளார். மிட்செல் சாண்ட்னர் தலைமயில், நியூசிலாந்து அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது.

ஹெட் டு ஹெட்:

இதுவரை 22 டி-20 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 12 போட்டிகளில் இந்திய அணியும், 9 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

மைதான நிலவரம்:

போட்டி நடைபெற உள்ள ராஞ்சி மைதானம் சேஸிங்கிற்கு ஏற்ற மைதானமாக உள்ளது. இதுவரை அங்கு நடைபெற்றுள்ள 25 டி-20 போட்டிகளில், 16 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச இந்திய அணி:

சுப்மான் கில், இஷான் கிஷன் (வி.கீ.), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் , குல்தீப் யாதவ்/யுஸ்வேந்திர சாஹல்

உத்தேச நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல்,  மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பிளேர் டிக்னர், இஷ் சோதி, பென் லிஸ்டர், லாக்கி பெர்குசன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget