மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Australian Open 2023: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளியேறிய சானிய மிர்ஸா..!
Australian Open 2023: அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா மிர்ஸா தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
![Australian Open 2023: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளியேறிய சானிய மிர்ஸா..! Australian Open 2023 Womens doubles pair Sania Mirza Anna Danilina out Suffer 4-6 6-4 2-6 defeat Australian Open 2023: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளியேறிய சானிய மிர்ஸா..!](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2018/01/02162330/Sania-mirza2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சானியா மிர்ஸா
இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா மற்றும் அன்னா டானிலினா ஜோடி, இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்தோ-கசாக் ஜோடி 4-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் அலிசன் வான் உய்ட்வான்க் மற்றும் உக்ரைனின் அன்ஹெலினா கலினினா ஜோடியிடம் தோல்வியடைந்தது.
முன்னதாக, சனிக்கிழமை நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் சானியா மிர்ஸா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ரியோ 2016ல் நடந்த அரையிறுதியில் சாய்னா மிர்ஸா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வைல்டு கார்டு எண்ட்ரி ஜெய்மி ஃபோர்லிஸ் மற்றும் லூக் சாவில்லை ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் தோற்கடித்தது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா அணி சார்பாக கலப்பு இரட்டை பிரிவினைப் பொறுத்த வரையில் சீனியர் பிளேயர் சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கலப்பு இரட்டை பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜோடியான ஜெய்மீ போர்லிஸ்-லூக் சாவில்லே ஜோடியுடன் இந்தியாவின் சானியா மிர்ஸா ஜோடி நேருக்கு நேர் மோதியது. முதல் செட் ஆட்டம் என்பதால் போட்டி தொடக்கம் முதலே பரபரப்புடன் காணப்பட்டது. ரசிகர்களின் பேராதரவுடன் போர்லிஸ் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காண்பித்தனர். தங்களது அணிக்கு சாதகமாக ரசிகர்கள் மத்தியில்பெரும் ஆதரவு இல்லை என்ற போதிலும், தங்களது அனுபவத்தை பயன்படுத்தி சானியா மிர்ஸாவும், போபண்ணாவும் சிறப்பாக விளையாடி 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி போர்லிஸ் ஜோடிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்தனர்.
இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டம் முதல் செட் ஆட்டத்தினை விட வேகம் எடுத்தது. குறிப்பாக இந்த செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியாஜோடி களம் இறங்கிய கணம் முதல் விளையாடியது. எனினும், இந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் சிறப்பாக விளையாடி எளிதில் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
இதனிடையே, இன்று (ஜனவரி, 22) நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்ஸா ஜோடி தோல்வியைச் சந்தித்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது. கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினாவுடன் இணைந்து களமிறங்கிய சானியா மிர்ஸா பெல்ஜியம் வீராங்கனை அலிசன்-அன்ஹெலினா (உக்ரைன்) ஜோடியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அலிசன் ஜோடி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்தது. இதையடுத்து, கவனமாக விளையாடிய சானியா ஜோடி, இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை சமன் செய்தது. இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் ஆட்டம் அனைவரும் எதிர் பார்த்ததைப் போலவே அனல் பறந்தது.
மூன்றாவது செட்டை அலிசன் ஜோடி, 6-2 என்ற கணக்கில் சிறப்பாக விளையாடி வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. சானியா ஜோடி வாய்ப்பை இழந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion