PAK vs NED World Cup 2023: உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்குமா பாகிஸ்தான்? டாஸ் வென்ற நெதர்லாந்து பீல்டிங் தேர்வு
ODI World Cup 2023 PAK vs NED: ஐதராபாத்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையில் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன
ODI WC Pak Vs Ned: ஐசிசி உலகக் கோப்பையிl பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தான் - நெதர்லாந்து மோதல்:
ஐதராபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பையின் இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
விரர்களின் விவரங்கள்:
பாகிஸ்தான்:
இமாம்-உல்-ஹக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், கொலின் அக்கரமேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்
வானிலை விபரம்:
ஐதராபாத் வெப்பநிலை பகலில் 32 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். பகல் மற்றும் இரவு நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த இடையூறுமின்றி போட்டி முழுவதும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதான விவரம்:
ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. இன்றைய போட்டியிலும் அதே நிலைமை நிலவக் கூடும். இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது சாதகமாக கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணிக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது.
பலம் & பலவீனங்கள்:
ஆசியக் கோப்பையில் லீக் சுற்றில் வெளியேறியதோடு, உலகக் கோப்பையில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்ப பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. பேட்டிங்கில் பாபர் அசாம், ஃபகார் ஜமான் மற்றும் முகமது ர்ஸ்வான் ஆகிய நட்சத்திர வீரர்கள் நம்பிக்கையளிக்க, பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடி தலைமையிலான வேகப்பந்து விச்சு யூனிட் நெதர்லாந்தை மிரட்ட காத்திருக்கிறது. இதனால், இந்த போட்டி அவர்களுக்கு கடுமையானதாகவே இருக்கக் கூடும். சர்வதேச அணியில் போதிய அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணி, இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.