மேலும் அறிய

Asian Games 2023: ஸ்குவாஷ் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 10வது தங்கத்தை வென்றது

இந்திய ஸ்குவாஷ் அணி பாகிஸ்தான் ஸ்குவாஷ் அணியை இறுதிப் போட்டியில்  2-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

இந்திய ஸ்குவாஷ் அணி பாகிஸ்தான் ஸ்குவாஷ் அணியை இறுதிப் போட்டியில்  2-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இது இந்தியாவுக்கு 10வது தங்கப்பதக்கம் ஆகும். 

இந்திய அணியின் அபாய் சிங் பாகிஸ்தான் வீரருக்கு எதிரான போட்டியினை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார். அதேபோல் இந்திய அணியின் மற்றொரு வீரரான ஷவ்ரோவ் கோசல் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். 

மொத்தம் மூன்று வீரர்கள் கொண்ட அணி இரு தரப்பிலும் களமிறங்கியது. விளையாட்டு வட்டத்தில் கூறப்படும் ’பெஸ்ட் ஆஃப் த்ரீ’ போட்டியின் வெற்றி அணியை தீர்மானிக்கும் என்பது போட்டியின் விதி. அதன்படி, இந்திய அணியின் மகேஷ், பாகிஸ்தான் வீரர் நசீர் இக்பாலிடம் 8-11, 3-11 மற்றும் 2-11 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் இந்திய அணியின் ஷவ்ரவ் கோஷல் பாகிஸ்தான் அணியின் முகமது அசீமை எதிர்கொண்டார். ஏற்கனவே இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இம்முறை இந்தியாவை பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் ஷவ்ரோவ் கோஷல் பாகிஸ்தானின் முகமது அசீமை எதிர்த்து களமிறங்கினார். இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணியின் ஷவ்ராவ் கோஷல் 11-5, 11-1 மற்றும் 11-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 

இதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது சுற்றில் வெற்றியாளர் யார் என்பதை உறுதி செய்யும் என்பதால் இரு அணி வீரர்களும் இரு நாட்டைச் சேர்ந்தவர்களும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர். இந்த சுற்றில் இந்தியாவின் அபாய் சிங்கும் பாகிஸ்தான் அணி சார்பில் நூர் ஜமான் களமிறங்கினர். மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இறுதிச் சுற்றில், அபாய் சிங் 11-7, 9-11,7-11, 11-9 மற்றும் 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான்  அணியை வெற்றி பெற்றது. 

இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா 9 தங்கம் வென்றுள்ள நிலையில், ஸ்குவாஷ் போட்டியில் வென்று பெற்ற தங்கத்துடன் இந்திய அணி தனது 10வது தங்கத்தினை வென்றுள்ளது. 

பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியா வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 10 தங்கமும், 14 வெள்ளியும் 14 வெண்கலமும் வென்றுள்ளது. 

நாடு

தங்கம்

வெள்ளி

வெண்கலம்

பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை
சீனா (CHN) 105 63 32 200
ஜப்பான் (JPN) 27 35 37 99
கொரியா குடியரசு (KOR) 26 28 48 102
இந்தியா (IND) 10 14 14 38
தாய்லாந்து (THA) 1 3 9 20
உஸ்பெகிஸ்தான் (UZB) 7 10 15 32
ஹாங்காங், சீனா (HKG) 5 13 18 36
சீன தைபே (TPE) 5 6 9 20
ஐஆர் ஈரான் (ஐஆர்ஐ) 3 10 10 23
DPR கொரியா (PRK) 3 6 4 13
கஜகஸ்தான் (KAZ) 3 4 19 26
இந்தோனேசியா (INA) 3 3 10 16
சிங்கப்பூர் (SGP) 2 4 4 10
மலேசியா (MAS) 2 3 8 13
வியட்நாம் (VIE) 1 2 12 15
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 1 1 4 6
மக்காவ், சீனா (MAC) 1 1 2 4
கத்தார் (QAT) 1 1 2 4
குவைத் (KUW) 1 1 1 3
தஜிகிஸ்தான் (TJK) 1 1 1 3
கிர்கிஸ்தான் (KGZ) 1 0 2 3
பஹ்ரைன் 1 0 0 1
மங்கோலியா (எம்ஜிஎல்) 0 2 5 7
ஜோர்டான் (JOR) 0 2 1 3
பிலிப்பைன்ஸ் (PHI) 0 1 6 7
புருனே தருஸ்ஸலாம் (BRU) 0 1 0 1
ஓமன் (OMA) 0 1 0 1
இலங்கை (SRI) 0 1 0 1
ஆப்கானிஸ்தான் (AFG) 0 0 3 3
லாவோ PDR (LAO) 0 0 2 2
பங்களாதேஷ் (BAN) 0 0 1 1
ஈராக் (IRQ) 0 0 1 1
லெபனான் (LBN) 0 0 1 1
பாகிஸ்தான் (PAK) 0 0 1 1
துர்க்மெனிஸ்தான் (டிகேஎம்) 0 0 1 1
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget