Asian Games 2023: ஆசிய விளையாட்டு - காலையிலேயே இரண்டாவது தங்கத்தை வென்ற இந்தியா - வில்வித்தையில் மிரட்டல்
Asian Games 2023: ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் காம்பவுண்ட் தனிநபர் ஆடவர் பிரிவில், இந்திய விரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
Asian Games 2023: ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் காம்பவுண்ட் தனிநபர் ஆடவர் பிரிவில், இந்திய வீரர்கள் ஓஜாஸ் பிரவின் மற்றும் அபிஷேக் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் இருவரும் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 149-க்கு 147 என 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ஓஜாஸ் பிரவீன் தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கனவே மகளிர் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்ற நிலையில், தற்போது ஓஜாஅசும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இன்றைய நாளில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
Hangzhou Asian Games: Ojas Pravin Deotale wins gold by defeating Abhishek Verma (149-147) in the men's compound archery final.
— ANI (@ANI) October 7, 2023
Abhishek Verma wins Silver. pic.twitter.com/uH8nMcZM3j
போட்டி விவரம்:
வில்வித்தையில் காம்பவுண்ட் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஓஜாஸ் பிரவின் மற்றும் அபிஷேக் ஆகியோர் மோதினர். 5 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற்றது. முதல் சுற்றில் கிடைத்த வாய்ப்புகளை இருவரும் சரியாக பயன்படுத்தி, இலக்கை துல்லியமாக அடித்து தலா 30 புள்ளிகளை பெற்றனர். இதனால் போட்டி மிகுந்த சுவாரஸ்யமானது. இரண்டாவது சுற்றில் சற்றே தடுமாறிய அபிஷேக் 59 புள்ளிகளை பெற, நேர்த்தியாக விளையாடிய ஓஜாஸ் 60 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றார். மூன்றவது சுற்றில் அபிஷேக் 8 பாயிண்டரில் மட்டுமே அடிக்க, 3 வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திய ஓஜாஸின் மொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 90-ஐ எட்டியது.
தங்கம் வென்று அசத்தல்:
கடைசி இரண்டு சுற்றுகளிலும் ஓஜாஸ் பிரவீன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, 119-க்கு 117 என்ற புள்ளிகள் அடிப்படையில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அபிஷேக் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்த வென்றார். ஓஜாஸ் பிரவீன் வில்வித்தை ஆடவர் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் மகளிர் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியிலும், இந்திய விராங்கனயான அதிதி கோபிசந்த் வெற்றி வாகை சூடினார்.
வில்வித்தையில் குவிந்த பதக்கங்கள்:
ஓஜாஸ் பிரவின் நடப்பு ஆசிய விளையாட்டில் வில்வித்தை பிரிவில் ஹாட்ரிக் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். , ஏற்கனவே ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. வில்வித்தையில் காம்பவுண்ட் பிரிவில் மட்டும் இந்தியா ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. நடப்பு ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் மட்டும் இந்தியா 9 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா சார்பில் ஓஜாஸ் பிரவின், அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர் தனிநபர் பிரிவில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது குறிபிடத்தக்கது. இதன் மூலம் 24 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என, இந்தியாவின் மொத்த பதக்கப் பட்டியலின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.