Argentina vs France: மகுடம் சூட்டப்போவது அர்ஜெண்டினாவா..? பிரான்சா..? மக்களின் ஆதரவு யாருக்கு..?
Argentina vs France: உலக்கோப்பையை மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணிதான் வெல்லும் என நமது ஏ.பி.பி நாடு நடத்திய வாக்கெடுப்பின் முடிவுகள் கூறுகின்றன.
Argentina vs France: உலக்கோப்பையை மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணிதான் வெல்லும் என நமது ஏ.பி.பி நாடு நடத்திய வாக்கெடுப்பின் முடிவுகள் கூறுகின்றன. இந்த வாக்கெடுப்பின் மூலம் 70.4 சதவீத கால்பந்து ரசிகர்கள் மேஜிக்கல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணிதான் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இறுதிப்போட்டி:
22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாகமாக தொடங்கி நடைபெற்று இன்று அதன் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் மேஜிக்கல் மெஸ்ஸி, மெர்சல் மெஸ்ஸி என அழைக்கப்படும் அர்ஜெண்டினா அணியின் கேப்டன், நம்பிக்கை நட்சத்திரம் எனப்படும் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவும், நடப்புச் சாம்பியன், திறமையான அணி, பிரான்ஸ் அணியின் எம்பாப்வே நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மக்கள் விருப்பம்:
இந்த போட்டி குறித்து நமது ஏ.பி.பி நாடு டிவிட்டர் தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் 70.4 சதவீத கால்பந்து ரசிகர்கள் அர்ஜெண்டினா அணிதான் கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளனர். அதேபோல், 29.6 சதவீத கால்பந்து ரசிகர்கள் பிரான்ஸ் அணி இந்தமுறையும் கோப்பையை வெல்லும் என தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.
உலகமே உற்றுநோக்கும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியினை காண உலகம் முழுவதும், கால்பந்து ரசிகர்கள், கால்பந்து விளையாட்டு வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
View this post on Instagram
இந்த உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரை அர்ஜெண்டினா அணி லீக் சுற்றில் இரண்டு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்தது. அதன் பின்னர் நடந்த சூப்பர் 16, காலிறுதிப்போட்டி, அரையிறுதிபோட்டி என தொடர்ந்து மிகவும் சிறப்பாக விளையாடி 6வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதேபோல் பிரான்ஸ் அணியும் லீக் போட்டியில் இரண்டில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து சுற்றுகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடி, தன்னை நடப்புச்சாம்பியன் என உலகிற்கு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இரு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு கத்தாரில் உள்ள லூசைல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் இறுதி நாள் நிறைவு விழா நடைபெறவுள்ளது.