Archery World Cup 2022: மகளிர் வில்வில்தை உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி..! இறுதிப்போட்டியில் தைபேவுடன் மோதல்..!
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் வில்வித்தை உலககோப்பை அரையிறுதியில் துருக்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர்களுக்கான உலககோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பாக பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, அங்கிதா பகத் மற்றும் சிம்ரன்ஜித்கவுர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி இன்று தனது அரையிறுதி போட்டியில் உக்ரைனை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இந்த போட்டியில் இறுதியில் 5 புள்ளிகளை பெற்றது. துருக்கி அணி 3 புள்ளிகளை மட்டுமே வென்றது. போட்டியின் இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தென்கொரிய அணியை வீழ்த்திய துருக்கி அணி அரையிறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய வீராங்கனைகள் மிகவும் சாமர்த்தியமாக ஆடி வெற்றியை வசப்படுத்தினர்.
WOMEN'S RECURVE TEAM REACH FINALS AT WORLD CUP 🏹
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) June 23, 2022
🎯 🇮🇳 Trio Deepika Kumari, Simranjeet Kaur and Ankita Bhakat reach finals defeating 🇹🇷 (who earlier upset Top seeds 🇰🇷)
🎯 Our women were consistently scoring 55+ in each round!
🎯 Men's team lost to 🇨🇭in pre QF! pic.twitter.com/nl1lFpYPWe
மற்றொரு அரையிறுதிப்போட்டியில் சீன தைபே அணியும், ஜெர்மனி அணியும் மோதின. இதில், சீனதைபே அணி 6-2 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால், தங்கப்பதக்கத்தை வெல்வதற்கான இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும், சீன தைபேவும் நேருக்கு நேர் மோத உள்ளன. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் துருக்கியும், ஜெர்மனியும் மோதுகின்றன.
முன்னதாக, காலிறுதியில் இந்திய அணி பிரிட்டன் அணியை 6-0 என்ற கணக்கில் அபாரமாக ஆடி வீழ்த்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்