Chess World Cup 2023: பிரக்ஞானந்தா பெற்றோருக்கு சூப்பர் பரிசை அறிவித்த ஆனந்த் மஹிந்திரா...
இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மகிந்திரா....
உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்க உள்ளதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜானில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டியில் அனைவரையும் வீழ்த்தி இறுதி சுற்று தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா தேர்வாகி இருந்தார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். உலக கோப்பையை கைப்பற்றும் போட்டியில் கடினமாகி விளையாடி மேக்னஸ் கார்ல்சனிற்கு நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா அனைவராலும் கொண்டாடப்பட்டார்.
Extremely elated to win Silver medal 🥈in Fide World Cup 2023 and qualified to the Candidates 2024!
— Praggnanandhaa (@rpragchess) August 26, 2023
Grateful to receive the love, support and prayers of each one of you! 🇮🇳
Thankyou everyone for the wishes🙏🏼
With my ever supportive, happiest and proud Amma❤️
📷@M_Sridharan pic.twitter.com/AgAVGybFxw
இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் 3வதாக நடைபெற்ற டை பிரேக்கர் ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் வெற்றிப்பெற்றார். 35 வயதான அனுபவமிக்க உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை 18 வயதான பிரக்ஞானந்தா எதிர்கொண்டு, அவரை திறணடிக்க வைத்தார். பிரக்ஞானந்தாவின் திறமையை குடியரசு தலைவர், பிரதமர் என அனைவரும் பாராட்டினர்.
இந்த நிலையில் பிரக்ஞானந்தாவின் கடைசி வரையிலான முயற்சிக்கு வாழ்த்து கூறிய மஹிந்திரா குழும தலைவரான ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவை இந்த அளவுக்கு உருவாக்கிய அவரது பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி. 400 என்ற எலக்ட்ரிக் காரை பரிசளிக்க உள்ளதாக டிவிட்டரில் அறித்துள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Appreciate your sentiment, Krishlay, & many, like you, have been urging me to gift a Thar to @rpragchess
— anand mahindra (@anandmahindra) August 28, 2023
But I have another idea …
I would like to encourage parents to introduce their children to Chess & support them as they pursue this cerebral game (despite the surge in… https://t.co/oYeDeRNhyh pic.twitter.com/IlFIcqJIjm
முன்னதாக இந்த நிலையில் பிரக்ஞானந்தா செஸ் விளையாடும் போது, அந்த இடத்தில் மகனுக்காக காத்திருக்கும் அவரது தாயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. உலக அரங்கில் மகன் போட்டியிடும் தருணத்தை எண்ணி மகிழ்ச்சியில் பெருமை கொண்டு நிற்கும் தாயின் புன்னகை உலகெங்கும் உள்ள பலரை நெகிழச் செய்தது. இந்த நிலையில் மூத்த செஸ் வீரரும் 13வது செஸ் உலகக்கோப்பையின் சாம்பியனும் ஆன, கேரி கேஸ்பரோவ் பிரக்ஞானந்தாவின் தாயை பாராட்டி டிவிட்டர் பதிவை வெளியிட்டார்.
Congrats to @rpragchess—and to his mother. As someone whose proud mama accompanied me to every event, it's a special kind of support! The Chennai Indian defeated two New York cowboys! He has been very tenacious in difficult positions. https://t.co/y8oJ6Z446M
— Garry Kasparov (@Kasparov63) August 21, 2023