Vedaant Madhavan: நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்த மாதவனின் மகன்! மாதவன் பகிர்ந்த சூப்பர் ட்வீட்!
தேசிய நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் புதிய சாதனை படைத்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் வீரராக பல போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். 1500 மீட்டர் ஃப்ரீஸ்டையில் நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்கேற்றார்.
இவர் இந்தத் தூரத்தை சுமார் 16.01.73 என்ற நேரத்தில் கடந்து அசத்தினார். இதன்மூலம் 2017ஆம் ஆண்டு அத்வைத் பெயிஜ் என்பவர் படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் புதிய தேசிய ஜூனியர் சாதனையை படைத்துள்ளார். அத்வைத் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டையில் பிரிவை 16.06.43 என்ற நேரத்தில் கடந்திருந்தார். அந்தச் சாதனையை 5 ஆண்டுகளுக்கு பிறகு வேதாந்த் மாதவன் முறியடித்துள்ளார்.
Never say never . 🙏🙏🙏❤️❤️🤗🤗 National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️🙏🙏@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022
தன்னுடைய மகன் வேதாந்தின் சாதனை தொடர்பாக நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எப்போதும் முடியாது என்று சொல்லாதீர்கள்… 1500 மீட்டர் ஃப்ரீஸ்டையில் நீச்சல் பிரிவின் தேசிய சாதனை உடைக்கப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மகன் வேதாந்த் நீந்தி சாதனையை எட்டும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
முன்னதாக 2022 டேனிஷ் ஓபன் நீச்சலில் வேதாந்த் மாதவன் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். வேதாந்த் 800 மீட்டர் நீச்சல் போட்டியில் 8:17.28 வினாடிகளில் சென்று பதக்கம் வென்றார். அந்த வெற்றி தொடர்பாகவும் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது பதிவிட்டிருந்தார். அதில்பாராட்டு விழாவின் போது வேதாந்தின் பெயர் அறிவிக்கப்படும் கிளிப்பை அத்துடன் இணைத்திருந்தார். அந்தப் பதிவும் பெரும் வாழ்த்துகளை பெற்றது. நீச்சல் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்