மேலும் அறிய

Chess Olympiad 2024: 45வது செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிரக்ஞானந்தா - குகேஷ்!சாதிக்குமா இந்தியா?

45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க நிகழ்வுகள் நேற்று நடைபெற்ற நிலையில் ஆட்டத்தின் முதல் ரவுண்ட் இன்று (செப்டம்பர் 11) ஹங்கேரியில் உள்ள புடபெஸ்டில் தொடங்குகிறது.

45வது செஸ் ஒலிம்பியாட்:

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த முறை செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெற்ற நிலையில் 45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் உள்ள புடபெஸ்டில் தொடங்கியுள்ளது.

இந்த 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க நிகழ்வுகள் நேற்று நடைபெற்ற நிலையில் ஆட்டத்தின் முதல் ரவுண்ட் இன்று(செப்டம்பர் 11) தொடங்குகிறது. அந்தவகையில் இந்த தொடர் செப்டம்பர் 23 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், புடாபெஸ்ட்டின் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் 193 அணிகளும், மகளிர் பிரிவில் 181 அணிகளும் போட்டியிடுகின்றன.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிரக்ஞானந்தா - குகேஷ் :

இதில், இந்தியா சார்பில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், விதித் குஜராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்கிறது. அதேபோல, மகளிர் பிரிவில், ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

இந்த செஸ் ஒலிம்பியாட்டில், ஒவ்வொரு அணியும் 11 சுற்றுகளில் 11 அணிகளை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் போர்டு 1, 2, 3, 4 என 4 போட்டிகள் நடக்கும். அந்த 4 போட்டிகளில் இரு அணிகள் பெரும் புள்ளிகளை வைத்து, அந்த சுற்றின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.11 சுற்றுகள் முடிவின் படி முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.அதேபோல், ஒவ்வொரு போர்டிலும் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறும் போட்டியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், இறுதியில், ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளும் சேர்த்து சிறப்பாக செயல்பட்ட அணிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்ததால் இந்த முறையும் இவர்கள் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியை எப்படி பார்க்கலாம்?

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை "செஸ்பேஸ் இந்தியா"என்ற யூடியூப் பக்கத்தில் நேரடியாக கண்டுகளிக்கும் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி எப்போது நடைபெறும்?

 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

 

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
"இடம் ரெடி... மைதானம் எப்போது?" - மயிலாடுதுறை ஆட்சியரிடம் செம்பனார்கோவில் இளைஞர்கள் முன்வைத்த 'செக்'!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Ration Shop : மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
Embed widget