வீட்டில் காமதேனு சிலையை எங்கே வைக்கலாம்? - இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
இந்து மதத்தில் காமதேனு என்பது சொர்க்கத்தில் இருந்து வந்த தெய்வீக பசு என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த பசுவானது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்து மதத்தில் பல்வேறு விதமான வழிபாட்டு தெய்வங்கள் உள்ளது. நம்முடைய வீட்டில் பூஜையறை இல்லாமல் இருப்பதில்லை. பூஜையறை என்பது வெறும் கடவுளை மட்டும் வழிபடும் இடமாக பார்க்கப்படுவதில்லை. மாறாக அவை நேர்மறையான எண்ணங்களின் இருப்பிடமாக அறியப்படுகிறது. இப்படியான நிலையில் பூஜையறையில் பல்வேறு விதமான தெய்வங்களின் புகைப்படங்களும், சிலைகளும் வைத்து வழிபடுவோம். அப்படியான வகையில் நாம் பூஜையறையில் காமதேனு சிலைகளை வைப்பதன் வழிமுறைகளைப் பற்றி காணலாம்.
இந்து மதத்தில் காமதேனு என்பது சொர்க்கத்தில் இருந்து வந்த தெய்வீக பசு என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த பசுவானது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் நாம் ஏராளமான பலன்களை பெற முடியும் என நம்பப்படுகிறது.
சாஸ்திரத்தைப் பொறுத்தவரை காமதேனு பசுவானது நாம் கேட்டதை கொடுக்கும் உயிரினமாக அறியப்படுகிறது. இதனை சுரபி என அழைக்கிறார்கள். தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது காமதேனு தோன்றியதாக சொல்லப்படுகிறது. இந்திரலோகத்தில் வசிக்கும் காமதேனு பசு அனைத்து பசுக்களுக்கும் தாயாக கருதப்படுகிறது. காமதேனு என்பது தாய் மற்றும் கன்றுடன் கூடிய சிலையாகும். இது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும் என்பது வாஸ்திர சாஸ்திர நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
எந்த திசையில் வைக்கலாம்?
காமதேனு சிலையை வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. இது மிகவும் புனிதமான மூலையாக கருதப்படுகிறது. அதேபோல் வீட்டின் பூஜையறை ஆன்மிக மையமாக பார்க்கப்படுகிறது. இங்கு காமதேனு சிலையை வைத்து வழிபட்டால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும். மேலும் வடக்கு திசை குபேரனின் இருப்பிடமாக கருதப்படுகிறது. செல்வத்தின் அதிபதியான குபேரனின் இருப்பிடத்தில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும். சூரியனின் திசையான கிழக்கு பக்கத்தில் வைப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஆன்மிக அன்பர்களில் தீராத நம்பிக்கையாக உள்ளது.
இப்படியாக காமதேனு சிலையை தினமும் வழிபடுவதால் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திருமணத் தடை, குழந்தை பேறு, இல்லற வாழ்க்கை பிரச்னை, தொழில் முன்னேற்றம் இல்லாமை, கல்வியில் சறுக்கல் போன்ற பல பிரச்னைகள் சரியாகும் என நம்பப்படுகிறது.
காமதேனுவின் அமைதி பண்பு குடும்பத்தின் ஒற்றுமையை உண்டாக்கி அமைதியான சூழலை உருவாக்கும் என நம்பப்படுகிறது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை நீக்கி குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி செய்யும் என கூறப்படுகிறது.





















