விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோயில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோயில் திருத்தேரோட்டம்:- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோயில் திருத்தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நாள்தோறும் காலையில் திருப்பல்லக்கு உற்சவத்திலும், இரவில் அம்ச வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கருட வாகனம், இந்திர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்நிலையில் பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையடுத்து கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட தேர் விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த பின்னர் நிலையை வந்தடைய உள்ளது. இந்த தேரோட்டத்தில் விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தேர் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.