மேலும் அறிய

அரச மரத்தை சுற்றிவந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என நம்பிக்கை: இஸ்லாமியர் ஒருவருக்கு ஆண் குழந்தை

Deevanur Sri Lakshmi Narayana Perumal Temple: வேம்பு, அரச மரத்தை திருமணமான பெண்கள் சுற்றிவந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்ற ஐதீகம் உள்ளது

லட்சுமி நாராயண பெருமாள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூரில் லட்சுமி நாராயண பெருமாள் என்ற பெயரில் அவதரித்து அருள்பாலித்து வரும் பெருமாளுக்கு பாண்டிய மன்னன் ஒருவன் மிகப்பெரிய கோயில் கட்டியிருக்கிறார். முன்பு ஆதிநாராயண பெருமாள் என்றழைக்கப்பட்டது. தற்போது லட்சுமி நாராயணபெருமாள் என்றே அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் சொல்லிலும் செயலிலும் கலந்து அவர்களை வழிநடத்திச் செல்லும் பெருமாளுக்கு லட்சுமி நாராயணன் என்கிற திருநாமமும் உண்டு. 

"நின்ற கோலதில் ஆதிநாராயணப் பெருமாள் சிலை"

இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், கோயில் கட்டப்பட்ட காலத்தை உறுதியாகக் கூற முடிய வில்லை. முன்பு ஆதிநாராயணப் பெருமாள் என்றழைக்கப்பட்ட இவர் தற்போது லட்சுமி நாராயணப் பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்ட போது கண்டெடுக்கப்பட்ட நின்ற கோலத்தில் ஆதிநாராயணப் பெருமாள் சிலை, சோழ மன்னர்களின் கலைத்திறனையும் சுற்றுப் பிராகாரங்கள் பல்லவர்களின் கலைத்திறனையும் கொண்டதாகக் காணப்பட்டன.

"கர்ப்பக் கிரகத்தில் பிரெஞ்சு மன்னன் இரண்டாம் ஜான்பால் அடையாளம்"

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் சுவாமியின் கர்ப்பக் கிரகத்தில் பிரெஞ்சு மன்னன் இரண்டாம் ஜான்பால் அடையாளம் பொறித்த டாலர் இருந்ததையும் பார்க்கும் போது பிரெஞ்சு படையெடுப் பின்போது இக்கோயில் சிதலப்படுத்தப்பட்ட விவரம் தெரிய வருகிறது. சுவாமி விக்ரகம் உடைக்கப்பட்ட போது கிராம மக்களும் முக்கியஸ்தர்களும் அதனை தடுத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து, கிராம மக்கள் லட்சுமி நாராயண சுவாமியின் விக்ரகத்தை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அவ்வுரை சேர்ந்த பக்தர் ஒருவரின் அறிய முயற்சியால் கோயிலை ஒருவரின் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தனர். புதிதாக எந்த கல் தூணையும் செதுக்கவில்லை. பழைய கல் தூண்களை வடிவம் மாறாமல் அப்படியே பயன்படுத்தி பெரிய கோயிலாகக் கட்டியுள்ளனர்.

21 அடி உயர் கொடி மரம்

கோயிலில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது 21 அடி உயர் கொடி மரம். அதன் முன்னே கருடாழ்வார் பெருமாளை வழிபடுவது போன்ற சிலை நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. கொடி மரத்தின் பின்புறம் பலிபீடம், துளசி மாடம் உள்ளன. முதலில் மகாமண்டபத்தில் கலைநயத்துடன் கூடிய கல்தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் மனித உடலின் மூலாதாரமாக விளங்கும் ஸ்ரீ சக்ரம் செதுக்கப்பட்டுள்ளது. கருவறைவரை இவ்வாறு ஆறு ஸ்ரீ சக்ரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. உள்ளே இருக்கும் அலங்கார மண்டபத் தூண்களில் பல கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வலம் புரி விநாயகர், சங்கு, சக்கலம் ஆஞ்சநேயர் ஆகிய உருவங்களை தரிசிக்கலாம். அர்த்த மண்டப சுவர்களில் நடனமாடும் லவ-குசன் உருவங்கள், அதன் அருகில் ஆஞ்சநேயர் என்று பார்வைக்கு பவித்ரமாகத் தோன்றுகின்றன. வாயிலின் மேற்புறத்தில் மூன்று மீன்கள் ஒன்றாகச் சேர்ந்தும் அதனருகே தனியாக மீன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவே பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதற்கு ஆதாரம்.

"சொர்க்கவாசல் அருகிலுள்ள தூணில் மேலே ஸ்ரீசக்ரமும் நடுவில் சிவலிங்கமும் கீழே ஆஞ்சநேயர் உருவமும் உள்ளன. மற்றொரு தூணில் மிருதங்கம் வாசிக்கும் பெருமாள், சிங்கம், நடுவில் ஸ்ரீசக்ரம், கீழே யானை ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன. பெருமாளை வணங்கும் முருகப் பெருமான், ஆண்டாள் உருவங்களும் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. உள்ளே அர்த்தமண்பத்தில் ஆதிநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள்புரிய, கருவறையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக லட்சுமி நாராயண பருமாள் பேரருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். கோயில் எதிரே 32 அடி உயர கல் தூணில் மாதாமாதம் திருவோண நட்சத்திரத்தன்று சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம்

இக்கோயிலில் வைகாசி தம் 10 நாள் பிரம்மோற்சவம் வெகு விமரிசை கொண்டாடப்படுகிறது. இதில் தேரோட்டமும் உண்டு. புரட்டாசி மாதம் 1 முதல் 12ம்தேதி வரை பெருமாள் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சி பரவசமானது. உள்ளங்கால் முதல் உச்சிவரை சூரியன் தனது ஒளியால் பெருமாளை அபிஷேகம் செய்கிறான்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை ஆகியவற்றுக்காக இக்கோயிலில் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக ராகு-கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலம் இது. கோயில் முன்புறம் உள்ள வேம்பு, அரச மரத்தை திருமணமான பெண்கள் சுற்றிவந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்ற ஐதீகம் உள்ளது.

செஞ்சியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்குள்ள பெருமாளை வழிபட்டுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அதற்கு நன்றிக்கடனாக ஒவ்வொரு பிரம்மோற்சவ தேரோட்டத்திலும் கலந்து கொள்வதை கடமையாக வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாசி மக தீர்த்தவாரிக்காக லட்சுமி நாராயணபெருமாள் (உற்சவர்) புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரைக்கு சென்று நீராடித் திரும்புகிறார். கோயில் வளாகத்தில் தீர்த்தக் குளமும் புதிதாக வெட்டப்பட்டுள்ளது. கோயிலினுள் வில்வமரமும் வன்னிமரமும் உள்ளன.

திண்டிவனம்- செஞ்சி சாலையில் 15வது கிலோ மீட்டரில் தீவனூர் உள்ளது. செஞ்சி செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நிற்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Embed widget