மேலும் அறிய

Villuppuram: சரும நோய்கள் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோயில் எது? மங்களேஸ்வரரின் தல வரலாறு கேளுங்க!

விழுப்புரத்தில் உள்ள மங்களேஸ்வரர் கோயிலுக்கு இந்திரனே வந்து சிவனை வழிபட்டு தனது அழகையும், இளமையையும் திரும்பப் பெற்றான் என்கிறது தலபுராணம்

தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற பல சிவாலயங்கள் உள்ளது. ஒவ்வொரு சிவாலயத்திற்கும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு.

மங்களேஸ்வரர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில் உள்ள தொலைவில் இறையனூரில் மங்களேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார். ராகு – கேது தோஷ நிவர்த்தி பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இந்த கோயில் 18 சித்தர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட கால பைரவர் இங்கு கால சங்கார மூர்த்தியாக அருளுகிறார். இவரை வழிபட எம பயம் நீங்கும் என்கிறார்கள்.

"சரும நோய்கள் உள்ளவர்கள் இக்கோயிலில் வணங்கி பலன் பெறலாம்"

தல வரலாறு:

இந்திர லோகத்தில் ரம்பை ஊர்வசியோடு வலம் வந்த இந்திரன், உலகில் தன்னைவிட அழகு நிறைந்தவர் எவரும் இல்லை என்று அகங்காரம் கொண்டிருந்தான். இந்த நிலையில் ஒருநாள், துர்வாச முனிவர் இந்திர லோகத்துக்கு விஜயம் செய்தார். ஆணவமிகுதியில் இருந்த இந்திரன், அந்த மாமுனிவரை கண்டுகொள்ளாமலும், அவருக்கு உரிய மரியாதைகளைச் செய்யாமலும் அலட்சியம் செய்தான்.

இதனால் கடும்கோபம் அடைந்த துர்வாசர், இன்று முதல் உனது அழகு அழியக்கடவது என்று சபித்துவிட்டார், இதனால்  சாபத்தின் பலனாக கடும் நோய்க்கு ஆளானான் இந்திரன், அவன் உடம்பு முழுவதும் வெண்புள்ளிகள் தோன்றியது. தனது தவறு உணர்ந்த இந்திரன், துர்வாச முனிவரைப் பணிந்து மன்னிப்பு வேண்டினான். அத்துடன், தனது சாபத்துக்கான விமோசனத்தைக் கூறும்படியும் கேட்டுக்கொண்டான். அவன் மீது பரிவு கொண்ட துர்வாசர், சிவபெருமானை வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்று அறிவுரை தந்தார்.

அதன்படியே இந்திரன் சிவனாரை துதித்து வேண்டினான். பூவுலகில் உள்ள மங்களபுரிக்குச் சென்று,  என்னை மனமுருக வேண்டி வழிபட்டு வந்தால், உனது பிணி நீங்கும், சாபநிவர்த்தி உண்டாகும் என்று அருளினார்  சிவபெருமான். அதன்படி பூலோகத்தை அடைந்த இந்திரன், இந்தத் தலத்திற்கு  வந்து சிவனை வழிபட்டு,  அழகும் இளமையும் பெற்றான் என்கிறது தலபுராணம். இதனால் இன்றும் "சரும நோய்கள் ( Skin Diseases ) உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பலன் பெறலாம்" என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

வளமான வாழ்வு கிட்டும்

ஒருமுறை சிவன் அளித்த மந்திர உபதேசத்தை கவனியாமல் இருந்த அன்னை பார்வதி மீது கோபம் கொண்ட சிவன், பூமிக்குச் செல்லுமாறு உமையவளுக்குக் கட்டளையிட்டார். அதை ஏற்று பூமியில் இந்த தலத்துக்கு வந்த அம்பிகை, இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது ஐதீகம் ஆகும். தேவியின் வழிபாட்டால் மனம் குளிர்ந்த ஈசன், இந்தத் தலத்தில் அன்னைக்கு மீண்டும் ஞான உபதேசம் அருளி, தன் திருமேனியிலும் இடம் கொடுத்தார் என்கின்றது தலத்தின் புராணங்கள்.

அகத்தியரின் சாபத்தால் ஒளியிழந்த சூரிய தேவன், இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாக ஆலய வரலாறு சொல்கிறது. வியாபாரத்திலும் உத்தியோகத்திலும் நலிவுற்றோர் இங்கு வந்து வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும் என்கிறார்கள்.

தேவர்கள் சகலரும் கூடி நான்கு கால பூஜைகளையும் அனுஷ்டித்த ஊர் இந்த மங்களபுரி. முதல் கால பூஜையை இந்திராதி தேவர்களும், இரண்டாவது கால பூஜையை பிரம்மா – விஷ்ணுவும், மூன்றாவது கால பூஜையை 18 சித்தர்களும், சப்த ரிஷிகளும், நான்காவது காலத்தை அன்னை சக்தியும் கொண்டாடியதாக ஐதீகம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget