Vastu Tips: வீட்டில் இந்த 5 இடங்கள்.. மயில் இறகுகளை வைத்தால் செல்வ மழை தான்!
மயில்கள் ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவை தமிழ் கடவுளான முருகப்பெருமானின் வாகனமாக அறியப்படுகிறது. இத்தகைய மயிலின் இறகுகள் அதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வாஸ்து விதிகள் மனித வாழ்க்கையில் ஒன்றிணைந்த ஒன்றாக மாறியுள்ளது. நிலம் சார்ந்த வாஸ்து விதிகளை நாம் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு பரிணாமங்களை நாம் அடையலாம் என நம்பப்படுகிறது. அதனால் தான் ஒரு வீடு, அலுவலகம் புதிதாக செல்லும்போது நாம் வாஸ்து விதிகளை கவனமாக கையாள்கிறோம்.
இப்படியான நிலையில் மயில்கள் ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவை தமிழ் கடவுளான முருகப்பெருமானின் வாகனமாக அறியப்படுகிறது. இத்தகைய மயிலின் இறகுகள் அதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வசீகரத்தின் அம்சமாக இருக்கும் மயில் இறகுகள் செல்வம், அழகு மற்றும் நேர்மறை ஆற்றலின் அம்சமாக கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மயில் இறகுகள் பாதுகாப்பு, செல்வம், நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இதனை வீடு அல்லது அலுவலகத்தில் சரியான இடத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்துக் கொள்வோம்.
வீட்டு ஹால்
குடும்பத்தின் வாஸ்து குறைபாடு இருந்தால் அடிக்கடி உடல்நல பாதிப்பு, பண பிரச்னை, கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். எனவே அமைதியான மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான சூழல் உண்டாக வேண்டுமெனில் வீட்டு ஹாலில் நாம் மயில் இறகுகளை காட்சிப்படுத்த வேண்டும். இது மகிழ்ச்சியை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் நேர்மறையான எண்ணங்களைப் பரப்பும் என நம்பப்படுகிறது.
படுக்கையறை
கணவன், மனைவி இடையே இல்வாழ்க்கை சிறப்பாக அமைய, மயில் இறகுகளை படுக்கையறையில் வைக்கலாம். இது தனிப்பட்ட வாழ்க்கையில் அன்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை உண்டாக்கி மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தோட்டம் அல்லது பால்கனி
உங்களுடைய வீட்டின் தோட்டம் அல்லது பால்கனி பகுதியில் மயில் இறகுகளை வைத்தால் அழகும் அமைதியும் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகமாகும். இது வளர்ச்சி, செழிப்பை கொடுக்கும்.
பணம் புழங்கும் இடம்
மயிலிறகுகளை நீங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கட்டி வைக்கவும். குபேர பகவான் இதனால் ஈர்க்கப்பட்டு செல்வத்தைப் பாதுகாப்பதோடு தேவையற்ற செலவுகளையும் தடுக்கிறது. உங்களின் வருமானமும் அதிகரிக்கிறது. அப்படி நீங்கள் வைத்தால் அதனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த மயில் இறகுகள் வீட்டில் செல்வத்தை நிரப்புவதாக நம்பப்படுகிறது.
வீட்டின் நுழைவு வாயில்
ஒரு இடத்தின் செழிப்பை அதிகரிக்கவும், அதனுள் நுழையும் எதிர்மறை சக்திகளைத் தடுக்கவும் நுழைவாயிலுக்கு அருகில் மயில் இறகை வைக்கவும். இது நேர்மறை எண்ணங்களை ஈர்க்கும் என்றும், அந்த இடத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது.
மயில் இறகுகளை நீங்கள் வைப்பதாக இருந்தால் அதனை ஒற்றைப்படை எண்ணில் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டு சேதமடைந்த அல்லது அழுக்கான மயில் இறகுகளை வைக்க வேண்டாம். சுத்தம் செய்யும் தரையில் வைக்காமல் ஏதேனும் ஒரு துணியில் வைக்க வேண்டும். இவை யாவும் இருந்தால் உங்களுக்கு குபேரனனி ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
(ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திரம் நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு பொறுப்பேற்காது)





















