மேலும் அறிய

Vaikunda Ekadasi: மயிலாடுதுறையில் 55 ஆண்டுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு; ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள், கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி கொடுத்த இடமாகும். 

Vaikunda Ekadasi: மயிலாடுதுறையில் 55 ஆண்டுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு;  ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சனி கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பதால், இவ்வூர் கோடிஹத்தி பாப விமோசன தலம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோழிகுத்தி என தற்போது அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பரமபத வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

55 ஆண்டுகளுக்குப் பிறகு மேலமாப்படுகையில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா. 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகையில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ராகு தோஷ நிவர்த்தி மற்றும் மாங்கல்ய பாக்கியம் அளிக்கும் இவ்வாலயத்தில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனை நடைபெற்றது. 

Vaikunda Ekadasi: மயிலாடுதுறையில் 55 ஆண்டுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு;  ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பெருமாள் கோதண்ட ராம அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாளுக்கு தமிழ் பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பெருமாள் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி தாராளன் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் வலது பாத தரிசனம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திரு விக்ரம நாராயண பெருமாள் எனப்படும் தாடாளன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாரு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். உற்சவர் நாடாளும் பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள் பாலித்து வருகிறார். 108 திவ்ய தேசத்தில் 28வது திவ்ய தேசமாக இக்கோவிலில் மூலவர் திரு விக்ரம நாராயணப் பெருமாள் வலது பாதத்தை ஆண்டு தோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடியும்.

Vaikunda Ekadasi: மயிலாடுதுறையில் 55 ஆண்டுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு;  ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பெருமாளின் வலது பாதத்தில் அருகே ஓர் அடி உயரத்தில் தவிட்டு தாடாளன் விக்ரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் மூலவர் வலது பாதம் மற்றும் தவிட்டு தாடாளன் பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிறவிப் பிணி நீங்கும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் தாடாளன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு சாத்துமுறை நடைபெற்றது தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் சொர்க்கவாசல் அருகே எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Vaikunda Ekadasi: மயிலாடுதுறையில் 55 ஆண்டுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு;  ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தொடர்ந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது சொர்க்கவாசல் வழியே பெருமாள் எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெருமாள் கோயிலை பலம் வந்து வசந்த மண்டபம் எழுந்துருவினர் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் உலகளந்த பெருமாளின் வலது பாத தரிசனம் கண்டு பிரார்த்தனை செய்தனர். பூஜைகளை பத்ரிநாத் பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget