மேலும் அறிய
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் தேதி அறிவிப்பு
திருச்சி மாவட்டம், உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா 6-ந்தேதி தொடங்குகிறது.

உறையூர் வெக்காளியம்மன் கோவில்
தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி வருகிற 5-ந்தேதி மாலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. 6-ந்தேதி காலை 8 மணி முதல் காலை 9 மணிக்குள் காப்புகட்டுதல் நடக்கிறது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்குவர்.
உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் வரும் 14-ந் தேதி நடக்கிறது.@abpnadu #Vekkaliayammantemple #Thechariotracewillbeheldonthe14th #Trichydistrict pic.twitter.com/cSpZNsg7gd
— Dheepan M R (@mrdheepan) March 28, 2023
மேலும் 6-ந்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். 7-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும், 13-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. 16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement