திருக்கார்த்திகை திபத்திருவிழா நிறைவு - மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில் பிராயசித்த பூஜை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை திபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில் பிராயசித்த பூஜை நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற இந்த தீபத் திருவிழாவில் காலையில் விநாயகர் சந்திரசேகர் ஆகியோர் மாடவீதிகளில் வலம் வந்தனர். அதே போன்று விநாயகர், முருகர், உண்ணாமுலை அம்மனுடன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் இரவு நேரங்களில் வெள்ளி ரிஷப வாகனம், சிம்ம வாகனம், காமதேனு ,கற்பக விருட்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான கடந்த 6-ம் தேதி அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட சிவனே மலையாக பக்தர்களால் வனங்க கூடிய மலையின் மேலும், தீபம் ஏற்றுவதற்கு தாமிரத்தால் ஆன (செப்பு) உருவான ஐந்தரை அடி உயரமுள்ள புதிய மகா தீப கொப்பரை இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. அதனையும் பக்தர்கள் காணிக்கையாக ஏற்கெனவே வழங்கியுள்ளனர். மேலும், மகாதீபம் ஏற்ற திரியாக பயன்படுத்தும் ஆயிரம் மீட்டர் காட்டன் துணியை, இந்த தீப கொப்பரை ஆனது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று அடுக்குகளால் ஆனது தான் இந்த தீப கொப்பரை சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவதை விளக்கும் வகையில் கோவில் வளாகத்தில் தீபதரிசன மண்டபம் எதிரில் சுமார் 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி தாண்டவம் ஆடிய பின்னரே மலையின் உச்சியில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். கடந்த 6-ம் தேதி ஏற்றப்பட்ட தீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஜோதிப்பிழம்பாய் அண்ணாமலையார் காட்சி அளித்தார். தீபமானது நிறைவடைந்த நிலையில் மலையின் உச்சியில் இருந்து தீபக்கொப்பரை இறக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். மலை உச்சியில் இருந்து மெல்ல மெல்ல இறக்கப்பட்டு வரும் தீபக்கொப்பரை கந்தாஸ்ரமம், முலைப்பால் தீர்த்தம் வழியாக கீழே இறக்கப்பட்டு பேகோபர தெரு வழியாக அம்முனி அம்மன் கோபுர வாசல் வழியே அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வருவதால் வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயசித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை இன்று நடந்தது. இதனையொட்டி அண்ணாமலையார் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது