மேலும் அறிய

தூத்துக்குடி சிவன் கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் இன்னும் திரட்டப்படாத நிலையில் லட்சக்கணக்கான சுவடிகள் உள்ளன. தமிழ்மன்னர்கள் முக்கிய ஆவணங்களை கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் திருக்கோவில்கள், மடங்களில் உள்ள அரிய பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அதன்படி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழுவை அறிவித்தார். இந்த குழு பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளை சேகரித்து பாதுகாத்து வருகிறது. அதன்படி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் அறிஞருமான சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் சுவடியியல் ஆய்வாளர்கள் க.தமிழ்ச்சந்தியா, கு.பிரகாஷ்குமார், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தூத்துக்குடி சங்கரராமேசுரவர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவிலில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தனர். ஒரு சிறிய கோபுர வடிவிலான பெட்டியை திறந்து பார்த்தனர். அந்த பெட்டியில் துணியில் சுற்றி வைக்கப்பட்ட 13 ஓலைச்சுவடிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த ஓலைச்சுவடிகளை குழுவினனர் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி சிவன் கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

இதுகுறித்து திட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் அறிஞருமான தாமரைப்பாண்டியன் கூறும் போது, ஓலைச்சுவடிகள் என்பது தமிழரின் வரலாற்று ஆவணங்களுள் முதன்மையானது ஆகும். ஓலைகளில் எழுதியதை மூலமாகக் கொண்டே கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் உருவாக்கப்பட்டன. எனவே இதன் அடிப்படையில் ஓலைச்சுவடியின் முக்கியத்துவத்தை உணரமுடியும். பழமையான சுவடிகளைக் கொண்டே தமிழரின் செவ்விலக்கியங்களும் நீதிநூல்களும் காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் மீட்டெடுக்கப்பட்டு உள்ளன. மிகப்பழங்காலத்திலேயே சங்கப்பாடல் ஏடுகள் தொகுக்கப்பட்டு உள்ளன. பிற்காலத்தில் மெக்கன்சி, லெய்டன், பிரெளன், எல்லிஸ், சரபோஜி மன்னர், எடோர்ட் ஏரியல், பாண்டித்துரைத்தேவர், கனகசபைப்பிள்ளை, ரா. ராகவையங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுகநாவலர், உ.வே.சாமிநாதய்யர் உள்ளிட்ட பலரால் பழமையான ஓலைச்சுவடிகள் திரட்டிப் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி சிவன் கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் இன்னும் திரட்டப்படாத நிலையில் லட்சக்கணக்கான சுவடிகள் உள்ளன. தமிழ்மன்னர்கள் முக்கிய ஆவணங்களை கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர். அவ்வாறு பாதுகாக்கப்பட்ட இடம் ஆவணக்களரி என்று அழைக்கப்பட்டது. எனவே இதன் மூலம் கோயில்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டதை அறியமுடிகிறது. இதன் அடிப்படையில் கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை அடையாளங்கண்டு திரட்டிப் பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து உள்ளார். தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள எனது தலைமையிலான சுவடிப்பணிக்குழுவினர் 195 கோயில்களில் களஆய்வு செய்து ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 149 சுருணை ஏடுகளும், 335 இலக்கியச் சுவடிகளையும், 26 செப்புப்பட்டயங்களையும் கண்டுபிடித்து உள்ளோம். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சுவடி இருப்புக் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வில் பழமையான 13 ஓலைச்சுவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி சிவன் கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

இதில் ஒரு பெரிய ஓலைச்சுவடியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரம் என்று அழைக்கப்படும் ஏழு திருமுறைகளும் தொகுக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்த ஓலைச்சுவடி சற்று சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மற்றொரு பெரிய ஓலைச்சுவடியில் மேற்கண்ட ஏழு திருமுறைகளோடு காரைக்கால் அம்மையார் இயற்றிய திருப்பதிகங்களும் காணப்பட்டன. இந்த ஓலைச்சுவடியை பிரதிசெய்தவர் நம்பிக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற குறிப்பு ஓலைச்சுவடியில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் எனும் நூல் அடங்கிய ஒரு சுவடிப் பிரதியும் இருந்தது. இந்த சுவடியைப் பிரதி செய்தவர் ஆறுமுகமங்கலம் அருகில் உள்ள கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்த ஆ. வைகுண்டம் பிள்ளை என்ற குறிப்பு சுவடியில் காணப்பட்டது. மற்றொரு சுவடியில் பெரியபுராணமும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும் உள்ளது. இந்தச் சுவடியை பிரதி செய்தவர் பொ. அய்யன்பெருமாள்பிள்ளை என்ற குறிப்பு சுவடியில் காணப்படுகிறது.

தூத்துக்குடி சிவன் கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

மாணிக்கவாசகர் இயற்றியதும் எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படும் திருவாசகம் அடங்கிய இரண்டு ஓலைச்சுவடிப் பிரதிகளும் இருந்தன. அத்தோடு மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவை நானூறு எனும் சுவடி ஒன்றும் இருந்தது. அகத்தியர் தேவாரத்திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணசாரம், தோத்திர சகத் திருவிருத்தம் ஆகிய நூல்கள் அடங்கிய ஒரு சுவடியும் இருந்தது. இரண்டு பெரிய சுவடிகளில் பதினொன்றாம் திருமுறை நூல்கள் (40 நூல்கள்) முழுமையாக இருந்தன. இதில் சங்க இலக்கிய நூலாகக் கருதக்கூடிய திருமுருகாற்றுப்படை நூலும் உள்ளது. மற்றொரு சுவடியில் திருமூலர் இயற்றிய பத்தாம் திருமுறை எனப்படும் திருமந்திரம் நூல் முழுமையாக இருந்தது. இதில் பன்னிரு திருமுறை சுவடிகள் இருந்தன.

மேலும் சங்கரராமேஸ்வரர் கோவிலில் உள்ள பாகம்பிரியாள் அம்பாளின் பெருமையை எடுத்துரைக்கும் நூலாக, சானகிநாதன் என்பவர் எழுதிய அருள்தரும் பாகம்பிரியாள் திருப்பள்ளியெழுச்சி என்ற சுவடியும், பழனி கிருட்டிணன் என்பவர் எழுதிய பாகம்பிரியாள் இரட்டைமணிமாலை என்ற சுவடியும் இருந்தன.

இந்த கோவிலில் உள்ள சுவடிகள் பெரும்பாலும் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் படியெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் கண்டறியபட்ட சுவடிகளில் உள்ள நூல்கள் தோன்றிய காலம் 7 முதல் 9-ம் நூற்றாண்டு வரையிலானது என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே பழமையான பக்தி இலக்கியங்களைத் தாங்கி நிற்கும் இந்த ஓலைச்சுவடிகளை உடனடியாகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த நூல்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளோம். இதனை பராமரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து சுவடியியல் ஆய்வாளர்களும் பராமரிப்பு பணியாளர்களும் இந்த கோவிலில் கிடைத்த 13 சுவடிக்கட்டுகளில் உள்ள 3 ஆயிரத்து 127 ஏடுகளைப் பராமரித்து பாதுகாக்கும் பணியோடு அவற்றை அட்டவணைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். இந்த ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget