மேலும் அறிய

திருவாரூரில் பேருந்துகள் காத்திருக்க நடந்த சியாமளாதேவி மகா காளியம்மன் ஆலய குடமுழுக்கு திருவிழா

அரசு பேருந்துகள் காத்திருக்க நடைபெற்ற சியாமளாதேவி மகா காளியம்மன் ஆலய குடமுழுக்கு திருவிழா. 

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட குமர கோவில் தெருவில் அமைந்துள்ள சியாமளா தேவி மகாகாளியம்மன் ஆலயம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த ஒன்பதாம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி லட்சுமி நவக்கிர ஹோமம்  வாஸ்து சாந்தி பிரவேச பலி ஆகியவற்றுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை ஆரம்பித்து பூர்ணாஹதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நேற்றுடன் நிறைவு பெற்று பூர்ணாஸ்தி தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனையடுத்து இன்று காலை நான்காம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. நான்காம் கால யாக பூஜையின் இறுதியில் மகாபூர்ணாஹதி தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புனித நீர் கடங்கள் ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டு சியாமளாதேவி மகாகாளியம்மன் ஆலய விமானத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் மடப்புரம் குமர கோவில் தெரு, காட்டுக்கார தெரு தெற்கு வீதி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவாரூரில் பேருந்துகள் காத்திருக்க நடந்த சியாமளாதேவி மகா காளியம்மன் ஆலய குடமுழுக்கு திருவிழா

இந்த குடமுழுக்கிற்கு வந்திருந்த பொதுமக்கள் யாகசாலை பூஜை நடைபெறும் போது சாலையின் இருமருங்கிலும் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். கடங்கள் புறப்பாடு நடைபெற்ற உடன் குடமுழுக்கை காணும் ஆர்வத்தில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையினை முழுவதுமாக ஆக்கிரமித்து நின்றனர். இதன் காரணமாக மயிலாடுதுறை நன்னிலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட பின்பு தீபாரதனை காட்டும் வரை அரசுப் பேருந்துகள் காத்திருந்து மக்கள் கூட்டம் கலைந்த பின்பு சென்றது. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக 15 நிமிடங்கள் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டது. 

திருவாரூரில் பேருந்துகள் காத்திருக்க நடந்த சியாமளாதேவி மகா காளியம்மன் ஆலய குடமுழுக்கு திருவிழா

அதேபோன்று திருவாரூர் மாவட்டம் பெரும்புகளூர் பெரியாச்சி அம்மன் சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழா கடந்த  ஒன்பதாம் தேதி விநாயகர் பிரார்த்தனை வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மங்கல இசையுடன் பூர்வாங்க வழிபாடு ஆரம்பித்து மகா கணபதி ஹோமம் மஹா லெட்சுமி ஹோமம் கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை மங்கல இசை பிரவேச பலி நடைபெற்றது. அதனையடுத்து  நேற்று முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூர்ணாஹதி தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பித்து விநாயகர் வழிபாடு போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று பெரியாச்சி அம்மன் ஆலய கோபுரத்திற்கு குடமுளுக்கு நடைபெற்றது.அதனை தொடர்ந்து விநாயகர் குடமுளுக்கு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பெரியசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் மூலவர் மகா கும்பாபிஷேகத்துடன் மகா அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
குழந்தை சிரிப்பு கனவாக இருந்தால்… தர்ம சாஸ்தா அருளால் நனவாகும்
குழந்தை சிரிப்பு கனவாக இருந்தால்… தர்ம சாஸ்தா அருளால் நனவாகும்
மாங்கல்ய பாக்கியம் தரும் மங்களாம்பிகை… தஞ்சையில் அரிய தலம்!
மாங்கல்ய பாக்கியம் தரும் மங்களாம்பிகை… தஞ்சையில் அரிய தலம்!
"அரியும் சிவனும் ஒன்னு.. அறியாதவர் வாயில் மண்ணு! - பொன்னேரியில் ஹரிஹரன் சந்திப்பு வைபவம்!"
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
Vijay Govt Formation: : ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்.. தமிழ்நாட்டில் மெய்ப்பித்த விசில் புரட்சி.. பதியேற்பு எப்போது?
Vijay Govt Formation: : ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்.. தமிழ்நாட்டில் மெய்ப்பித்த விசில் புரட்சி.. பதியேற்பு எப்போது?
Tamil Nadu Government Formation LIVE: தமிழகத்தில் புதிய சகாப்தம்: நாளை முதல்வராக பதவியேற்கிறார் 'தளபதி' விஜய்!
Tamil Nadu Government Formation LIVE: தமிழகத்தில் புதிய சகாப்தம்: நாளை முதல்வராக பதவியேற்கிறார் 'தளபதி' விஜய்!
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Vijay Govt Formation: தவெகவுக்கு ஓகே சொன்ன இடதுசாரிகள்.. முடிவுக்கு வரும் இழுபறி.. ஆட்சியமைக்கும் விஜய்?
Vijay Govt Formation: தவெகவுக்கு ஓகே சொன்ன இடதுசாரிகள்.. முடிவுக்கு வரும் இழுபறி.. ஆட்சியமைக்கும் விஜய்?
Embed widget