மேலும் அறிய

TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி

TVK Candidate: திமுக மற்றும் அதிமுக இல்லாத முதல் ஆட்சி அரைநூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் அமைய உள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுகவே தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கும் என்று பலரும் கணித்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. 

முதலமைச்சர் ஆகும் விஜய்:

தமிழ்நாட்டின் வரலாற்றில் சுமார் அரை நூற்றாண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளே மாறி, மாறி ஆட்சியமைத்து வந்த நிலையில் முதன்முறையாக இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய உள்ளது.

தவெக ஆட்சி:

108 தொகுதிகளே வெற்றி பெற்றிருந்த நிலையில், தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் விஜய் தவித்து வந்தார். காங்கிரஸ் ஆதரவு மட்டுமே கிடைத்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் அடுத்தடுத்து இன்று ஆதரவை அளித்துள்ளனர். இதனால், 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு என்ற தனிப்பெரும்பான்மையை விஜய் பெற்று ஆட்சியமைக்க உள்ளார்.

தனக்கு ஆதரவு அளித்த கட்சியின் தகவல்களை விஜய் நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார். இந்த சூழலில், விஜய் தலைமையிலான தவெக அரசு நாளை பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொண்டர்கள் கொண்டாட்டம்:

விஜய் முதலமைச்சர் ஆவது உறுதியானதையடுத்தும், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைய உள்ளதாலும் அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். அவர்கள் வழியெங்கிலும் பட்டாசுகள் வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் வரலாற்றிலே எம்ஜிஆருக்கு பிறகு எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கியிருந்தாலும், அவர்கள் யாருமே செய்யாத ஒரு வரலாற்றை விஜய் செய்துள்ளார். 34 சதவீத வாக்குகளை அதாவது 1.70 கோடி வாக்குகளைப் பெற்று அவர் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.

முதன்முறை போட்டியிட்டதிலே ஆட்சியைக் கைப்பற்றியுள்ள விஜய்யின் தவெக-வால் தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சர், புதிய அமைச்சரவை, புதிய செயல்பாடுகள் என்று மாறியுள்ளது. இதனால், அவரது ஆட்சியும்,அவரது ஆட்சி செயல்பாடும் எப்படி இருக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

RRB Exam Free Coaching Class : ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி.! இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி.! இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
US H-1B Visa Fee: ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
Embed widget