மேலும் அறிய

குழந்தை சிரிப்பு கனவாக இருந்தால்… தர்ம சாஸ்தா அருளால் நனவாகும்

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் தர்மசாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருட் பாலிக்கிறார்.

தஞ்சாவூர்: குழந்தை பேறு வேண்டி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறார் தர்ம சாஸ்தா. இதனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் உள்ளது. சரிங்க இந்த தலம் எங்கு இருக்கிறது. தர்ம சாஸ்தா இங்கு எப்படி வந்தார் என்று தெரிந்து கொள்வோமா!!!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது கூத்தூர். முன்பு நடனபுரி என்று அழைக்கப்பட்ட இப்பகுதி கூத்தூர் என தற்போது அழைக்கப்படுகிறது. ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில். பெரிய மதிற்சுவர்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் இரண்டு குதிரை, இரண்டு யானைகள், தர்மசாஸ்தாவின் வாகனங்களாக விளங்குகின்றன.

இடப்புறம் காவல் தெய்வமான கருப்பர் என்று அழைக்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பரான சங்கிலி கருப்பர் சன்னதி உள்ளது. வடக்கு நோக்கி மதுரை வீரன் சந்நதி உள்ளது. உள்ளே நுழைந்ததும் வாகன மண்டபம் உள்ளது.

இங்கே யானை, பலிபீடம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மூல முதல்வரான விநாயகர் அருட்பாலிக்கிறார். அடுத்துள்ள மகா மண்டபத்தில் தர்ம சாஸ்தாவின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் தர்மசாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருட் பாலிக்கிறார். தர்மசாஸ்தாவின் வலதுகால் தொங்கிய நிலையிலும் இடது கால் மடிந்து குறுக்காக இடது முழங்கால் மேல் இடது கை நீட்டி அருட்பாலிக்கிறார்.

இவரின் வலதுபுறம் பூர்ணாம்பிகை திருமண கோலத்தில் அமர்ந்துள்ளார். இடதுபுறம் புஷ்கலாம்பிகை அமர்ந்துள்ளார்.

கேரள வணிகர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு அப்போதைய சோழ நாட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒரு முறை வந்த கேரள வணிகர்கள் வியாபாரம் செய்ய தங்களுடன் விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகளில் வந்தனர். தங்களின் வழிபாட்டு தெய்வமான தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகளையும் கொண்டு வந்தனர். நடனபுரிக்கு (கூத்தூர்) அந்த வணிகர்கள் வந்தபோது மழை வரும் போல் இருந்ததால் வணிகர்கள் தங்கள் பொருட்களுடனும் தர்மசாஸ்தாவுடனும் அருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் தங்கினர். இரவு வந்தது.

தர்மசாஸ்தா தனது சகோதரரான விநாயகரிடம் தான் இரு மனைவிகளுடன் வந்திருப்பதால் தங்க வசதியான இடம் வேண்டுமென கேட்டார். உடனே விநாயகரும் தன் இடத்தை சாஸ்தாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தள்ளி சென்று அமர்ந்தார். தள்ளிச்சென்று அமர்ந்த அந்த விநாயகர் ஆதி சித்தி விநாயகர் என்று இன்றும் இந்த ஆலயத்தில் போற்றப்படுகிறார்.

மழைவிட்டதும் வணிகர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பொருட்களை எடுத்து சென்றனர். ஆனால் தர்மசாஸ்தாவின் சிலையை மறந்து சென்று விட்டனர். தஞ்சை வந்த வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த மிளகு. ஏலக்காய் போன்ற மூட்டைகளை வியாபாரம் செய்ய பிரித்த போது அதிர்ச்சியடைந்தனர். அந்த மூட்டைகள் அனைத்தும் உப்பு மூட்டைகளாக மாறி இருந்தன. அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் கொண்டு வந்த தர்ம சாஸ்தாவின் சிலையை நடனபுரியில் விட்டுவிட்டு வந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. இதனால் தான் இந்த நிலை ஏற்பட்டது என உணர்ந்த வணிகர்கள் உடனே நடனபுரி வந்தனர். தர்ம சாஸ்தாவை எடுக்க முயன்றனர். ஆனால் அது முடியாத காரியமாக இருந்தது.

அப்போது தர்ம சாஸ்தா அசரீரியாக ‘‘இது என்னுடைய திருவிளையாடல், அஞ்ச வேண்டாம். உங்க பொருட்கள் மறுபடியும் அதே நிலையை அடைந்திருக்கும். நான் இங்கே இருக்க விரும்புகிறேன். இனி, வணிகம் செய்யும் பொருட்டு நீங்கள் இவ்விடம் வரும் போது என்னை தரிசித்து செல்லுங்கள். நான் இங்கேயே நிலை கொண்டதை உங்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே நான் திருவிளையாடல் நடத்தினேன் என்று தெரிவித்தார்.

அது முதல் தர்மசாஸ்தா இவ்விடம் அருட்பாலிக்கிறார். இத்தலத்தில் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு அந்தப்பேறு நிச்சயம் கிடைக்கிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வளைகாப்பு விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கில் வளையல்களை கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சாத்தியும் குழந்தை பிறந்தவுடன், ஆலயமணியை வாங்கி கட்டியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

தர்மசாஸ்தா பூர்ணாம்பிகை, புஷ்கலாம்பிகையுடன் அருள் பாலிக்கும் இக்கோயில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கூத்தூரில் அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Power Shutdown: தஞ்சாவூரில் நாளை (13-05-2026) மின் தடை; எங்கெங்கே- முழு லிஸ்ட்!
TN Power Shutdown: தஞ்சாவூரில் நாளை (13-05-2026) மின் தடை; எங்கெங்கே- முழு லிஸ்ட்!
"கல்லில் ஆடிய நர்த்தனம்: சோழர் கால சிற்பிகளின் வியக்கவைக்கும் உளி வீச்சு!" எங்கு தெரியுங்களா?
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
"மருத்துவ உலகின் தேவதைகள்: தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Vanni Arasu:
Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
US Iran War Pakistan: பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?
‘காத்திருப்போர் பட்டியலில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்’ பின்னணி என்ன?
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
Embed widget