Vijay Govt Formation: : ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்.. தமிழ்நாட்டில் மெய்ப்பித்த விசில் புரட்சி.. பதியேற்பு எப்போது?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 9, 2026) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 9, 2026) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீடித்த இழுப்பறி:
சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகிய கட்சிகள் இன்று மாலை தவெக-வுக்குத் தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பதில் நிலவி வந்த இழுபறி நீங்கியுள்ளது.
ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்
தற்போதைய அரசியல் நிலவரத்தின்படி தவெக தலைமையிலான கூட்டணியின் பலம்:
-
தமிழக வெற்றிக் கழகம்: 107 (விஜய் இரண்டு இடங்களில் வென்றதால் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்கிறார்)
-
காங்கிரஸ்: 5
-
விசிக: 2
-
சிபிஐ: 2
-
சிபிஎம்: 2
- ஐ.யூ.எம்.எல்- 2
-
மொத்த பலம்: 120
பதவியேற்பு விழா ஏற்பாடுகள்
இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்த விஜய், 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விஜய்யை ஆட்சியமைக்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக எளிமையான அல்லது பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக ஆகியவை ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இதனால் தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்புள்ளது.
வரலாற்றுச் சாதனை
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து, முதல்முறையாக ஒரு புதிய கட்சி ஆட்சிப் பீடத்தில் அமர்வது தமிழக அரசியலில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் விஜய் கையெழுத்திடப்போகும் முதல் கோப்பு எதுவாக இருக்கும் என்ற ஆர்வம் தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது.
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்






















