மேலும் அறிய

தேனி: பல்வேறு அதிசயங்கள் அடங்கிய மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்

தேனி : 500 வருடங்களுக்கு மேலான மிக பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்!

மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தேவதானப்பட்டி. அந்தப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது வங்கிசாபுரி எனும் பகுதியை ஒரு ஜமீன் ஆண்டுவந்தார். அவர் பெயர் பூசாரி நாயக்கர். இந்த ஜமீனில்  இருந்த மாடுகள் வனப்பகுதியில் உள்ள உணவுக்காக  தினமும் அனுப்பி வைக்கப்படும் அப்படி தினமும் அனுப்பிவைக்கப்படும் மாடுகள் சென்று திரும்பும்போது ஒரு மாடு மட்டும் தனியாக வனப்பகுதிக்குள் செல்வதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்திருந்தது, இதனை பார்த்த மாடு மேய்ப்பவர் ஒருவர் ஒருநாள் அந்த மாடு பின்பு தொடர்ந்து சென்ற போது அந்த மாடு ஒரு புற்றுக்குள் பால் பீச்சிக்கொண்டிருப்பதை பார்த்து மேய்ப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.

தேனி: பல்வேறு அதிசயங்கள் அடங்கிய மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்

உடனே மாடு மேய்ப்பாளர் இந்த சம்பவம் குறித்து  ஜமீன்தாரிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஜமீன்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் சென்று பார்த்தபோது ஏதோ தெய்வ குற்றம் செய்ததாக அவருக்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அசரீரியில்தான் இந்தப் பகுதியில் முன்பு ஆட்சி செய்ததாகவும் அரக்கனை வதம் செய்துவிட்டு அமைதியாக இருக்கும் இந்த வனப்பகுதியிலேயே தான் தங்கி விட்டதாகவும் பெண்ணின் அசரீரி குறல் கூறியதாக கூறப்படுகிறது. அசரீரியின் இந்தப் பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றில் ஒரு பெட்டி வரும் எனவும் அந்த பெட்டியை மூங்கில்அணை கொண்டு தடுத்து நிறுத்தி இந்த ஆற்று அருகிலேயே பெட்டியை  வைத்து பூஜை செய்து வழிபடுமாறு கூறியதாகவும் ,

தேனி: பல்வேறு அதிசயங்கள் அடங்கிய மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்

அதனைத் தொடர்ந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டதாகும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும்  இருக்க கூடாது என கூறப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் இதுவரை யாரும் சென்றதில்லை எனவும் கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.


தேனி: பல்வேறு அதிசயங்கள் அடங்கிய மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்

இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக ஸ்தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசிதிபெற்று விளங்குகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget