மேலும் அறிய

Thai amavasai: தை அமாவாசை: புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புதுச்சேரி: தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

புதுச்சேரி: தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால், பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையில் திதி கொடுப்பது வழக்கம்.

தை அமாவாசையை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அமாவாசை தினங்களில் தை அமாவாசை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம். அந்தவகையில்  தை அமாவாசை தினமான சனிக்கிழமை புதுவையில் சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால், பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுப்பது வழக்கம்.

இதில் மணக்குள விநாயகர், லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோயில், காமாட்சி அம்மன், சுந்தரவிநாயகர் கோயில், கவுசிக பாலசுப்பிரமணியர், தண்டுமுத்துமாரியம்மன், வரதராஜபெருமாள், பெத்துச்செட்டிபேட் வச்சாணியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை சாலைக்கு கொண்டு வரப்பட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்புஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதே போல் வில்லியனூர் அருகே பழமை வாய்ந்த திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி உடனுறை கெங்கவராகநதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காசிக்கு நிகரான புண்ணிய தலங்களில் ஒன்றாக பக்தர்களால் வழிபடும் திருக்காஞ்சியில் அமாவாசையன்று வழிபடுவது சிறப்பானது.ஆண்டுக்கு ஒருமுறை வரும் தை அமாவாசையன்று கெங்கவராக நதீஸ்வரரை வழிபட்டால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி பித்ருதோஷம் விலகும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் திதி கொடுத்தவர்கள் மற்றும் வீட்டிலேயே திதி கொடுத்தவர்கள் காசி விஸ்வநாதரை வழிபட்டதன் பலனை பெறுகிறார்கள்.

இதேபோல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சங்கராபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணமும் செய்தனர். அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அங்கு திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல, தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் நடந்தது. இதிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
Embed widget