மேலும் அறிய

Thanjavur: வெயிலை சமாளிக்க தஞ்சை பெரிய கோயிலில் தண்ணீர் தெளிக்கும் பணி

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாகவும், பக்தர்கள் நடந்து செல்லும் போது வெயில் சூடு தெரியாமல் இருப்பதற்காகவும் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பர்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை.

பெரிய கோவில் தொல்லியல் துறை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி நடப்பதற்காக கோயில் வெளி பிரகாரங்களில் கோவில் ஊழியர்கள் பைப் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பணி காலை, மதியம், மாலை ஒரு முறை என மூன்று முறை செய்யப்படுகிறது. அதேபோல் பக்தர்களின் வசதிக்கேற்ப விரிப்பும் விரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த விரிப்பிலும் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget