மேலும் அறிய

Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

கருடா செடியில் மலர் அதிகம் பூத்தால் வருடம் முழுவதும் செழிக்கும் அளவில் மழை இருக்கும், அதே நேரத்தில் மிக மிக அதிகமாக பூப்பூத்தால் மழையால் வெள்ளம் ஏற்படும்.

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது.

Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகம் அன்று தான் தாமிரபரணியை அகத்தியர் தனது கமண்டல நீரில் இருந்து பொதிகைமலையில் விட்டு நதியை ஓடச் செய்தார் என்று தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது. தாமிரபரணி நதி பரணி என போற்றபட்டாலும் வைகாசி விசாக நட்சத்திரத்தில் தோன்றியவள் என்ற கூற்றும் தாமிரபரணி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தான் வைகாசி விசாகம் தாமிரபரணி நதியில் பெருமையாகப் போற்றப்படுகிறது.

Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

இந்த நாளில் தான் குபேரன் தாமிரபரணி நதியில மூழ்கி தனது இழந்த பொருளை மீட்டார். நம்மாழ்வார் பிறந்தது இந்த தினத்தில் தான். முருகப்பெருமான் அவதாரமும் வைகாசி விசாகத்தில் தான் நடைபெறுகிறது. இந்தநாளில் தாமிரபணியில் எங்கு குளித்தாலும் 12 வருடத்துக்கு ஒரு முறை கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டுகிறது.இந்த பெருமை கொண்டு தாமிரபணிக்கு பிறந்த நாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் பல்வேறு பூஜை நடைபெறுகிறது. இந்த வருடம் மழை வேண்டியும் தாமிரபரணி கரையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 

Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு, நதிக்கு அபிசேகம் செய்து பூஜை நடந்தது. இதையட்டி தாமிரபரணி நதிக்கரை அருகே உள்ள முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் என்ற முகில் வண்ணநாதர், முக்குறுணி அரிசி பிள்ளையார், லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. அதன்பின் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.  அதைத்தொடர்ந்து முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளைபெற்ற குணவதியம்மன் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. பின் கோவிலில் இருந்து கும்பம் எடுத்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிசேகங்கள் செய்து கும்பநீரும் ஊற்றி அபிசேகம் செய்யப்பட்டது. 

Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட மழை வேண்டி ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி தலைமை வகித்து பூஜைகளை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

பூங்குளத்தில் கருடா என்ற செடி உள்ளதாக கூறும் காணிகள் அதில் பூக்கும் மலரை வைத்து தான் அந்தந்த மழை அளவை தீர்மானிக்கின்றனர். கருடா செடியில் மலர் அதிகம் பூத்தால் வருடம் முழுவதும் செழிக்கும் அளவில் மழை இருக்கும், அதே நேரத்தில் மிக மிக அதிகமாக பூப்பூத்தால் மழையால் வெள்ளம் ஏற்படும் என்கின்றனர். அதே நேரத்தில் பூ பூக்கவில்லை என்றால் வறட்சி அதிகம் ஏற்படும் என்கின்றனர் காணிவாசிகள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget