கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் முத்து பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் முத்து பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் சுவாமி திருவிதி விழா நடைபெற்று வரும் நிலையில் இன்று கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடன் முத்து பல்லாக்கில் திருவீதி விழா காட்சியளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடன் முத்து பல்லாக்கு வாகனத்தில் திருவீதி உலா புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி முக்கிய வீதியில் வழியாக திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
தான்தோன்றி மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழா சில நாட்களுக்கு முன் கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று முத்துமாரியம்மன் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து பிரத்தியேக பூத்தட்டு வாகனத்தில் மாரியம்மன் கொழுவிறுக்க செய்தனர். அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முத்து மாரியம்மன் பூச்செறிதல் வாகனம் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வலியங்கிலும் பக்தர்கள் வண்ண வண்ண பூக்களால் முத்துமாரி அம்மனுக்கு பிரார்த்தனை செய்தனர். அதை தொடர்ந்து தாரை தப்பட்டைகள், வான வேடிக்கையுடன் பூச்செரிதல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
33 ஆம் ஆண்டாக நடைபெறும் முத்து மாரியம்மன் பூச்செரிதல் விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வலி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தான்தோன்றி மலை இளம் காளையர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பாக செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்